197 • கண்கள் பார்வை மழுங்கிக் மழுங்கிக் காணப்பட்டன. அவருடன் எப்பொழுதும் உதவிக்கு என்று இருந்த மாணவர்கள் இருவர். அவரை மெல்ல அழைத்துவந்து மேடை ஏற்று வித்தனர். அவர் யாவர்க்கும் புரியும் வண்ணம். தெளிவான சொற்களால், அழுத்தந்திருத்தமாகக் கவர்ச்சிகரமான குரலில் பேசினார். அவர் பேசத்துவங்கியவுடன் உலக முதன் மொழிப் பரம்பரையைச் சேர்ந்ததும், திராவிடக்குழு மொழிகளில் தலைசிறந்து விளங்குவதும், தொன்மை - சிறப்பு - அழகு - இனிமை ஆகிய பண்புகள் வாய்ந்ததுமான தமிழ் மொழியில் தாம் பேச முடியாமல் இருப்பதற்குப் பெரிதும் வருத்தந் தெரிவித்துக்கொண்டார். மற்றுமொரு முறை பேசும்படியான வாய்ப்புச் சில ஆண்டுகள் கழித்துத் தமக்குக் கிடைக்குமாயின், அப்பொழுது கட்டாயம் தமிழில் பேசுவேன் என்றும் தம் விழைவைத் தெரிவித்துக்கொண் டார். சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று சொல்லுவதற்கு எவ்விதச் சான்றும் கிடைக்கப் பெறாத தால், அது ஆரியமல்லாத ஒரு நாகரிகமாகத்தான் இருக்கக் கூடும் என்பதையும், அங்கு அகழ்ந்து காணப்பட்ட பொருள் கள் திராவிட இனமக்கள் புழங்கும் பொருள்களோடு ஒத்திருப்பதால், அது திராவிட நாகரிகமாகத்தான் இருக்க முடியும் என்பதையும் அவர் விளக்கிக் காட்டினார். சிந்து வெளியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களிலும், முத்திரைகளிலும் காணப்படும் எழுத்துக்களைப் படிக்க, இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள மொழிகள் அனைத்தை யும் பயன்படுத்திப் பார்த்தபோது, தமிழ்மொழி ஒன்றினால் தான் அவற்றை எளிதில் புலப்படுத்திக்கொள்ள முடிந்தது என்றும், தமிழ் மொழிக்கும் கோண்ட், கூய்,ஒராயான், இராசமகால், பிராமி போன்ற ஏனைய திராவிடக் குழு மொழிகளுக்கும் தாய்மொழியாக விளங்கிய ஒரு திராவிட மொழியே மொகெஞ்சொதரோவின் மொழியாக விளங்கி யிருக்கவேண்டும் என்றும், தக்க காரணங்களோடும், விளக்கப்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/199
Appearance