உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கள். எது 'அறிவியல்?' எது 'கலையியல்?' என்றால் மாந்தனது அறிவால் அறியப்படுகின்ற அனைத்தும் அறிவியல்' என்றும், உள்ளத்தால் உணரப்படுகின்ற அனைத்தும் கலையியல்’ என்றும் அறிவுறுத்தப்படுகின்றன. ஞாயிறு ஒரு பெரிய நெருப்புப் பிழம்பாக இருக்கின்றது; கோள்களெல்லாம் அதனைச் சுற்றிவருகின்றன. உலகம் ஞாயிற்றிலிருந்து ஒன்பது கோடியே இருபது இலட்சம் மைல் தொலைவில் உள்ளது; உலகம் தன்னைத்தானே இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை சுழற்றிக்கொள்கிறது; உலகம் ஞாயிற்றை 3654 நாளுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது என்றெல்லாம், அறிவியல் அறிஞன் அறிவால் ஆராய்ந்து அறிந்து கூறுகிறான். இதனை ‘அறிவியல்’ என்கிறோம். . செங்கதிரோன் நீலத்திரைக் கடலைக் கிழித்துக் கொண்டு கிழக்கே எழுந்தான்; விரிகதிர்களைப் பரப்பினான்; காரிருள் கடிது ஓடிற்று; பனிப்படலங்கள் மறைந்தன; செவ்வானம் தோன்றிற்று; கதிரவன் வானவெளியில் பகல் முழுவதும் உலாவினான்; மாலையில் மேலைக்கடலில் போய் மூழ்கினான்; பின்னர் குளிரடைந்து நிலாவாகத் தோன்றினான்; நிலவொளி வீசினான்; சிந்தையில் இன்பத்தேனைத் தெளித்தான் என்று கவிஞன் உள்ளத்தால் உணர்ந்ததைக் கூறுகிறான். இதனைக் கலையியல்' என்கிறோம். மேலும் ஒரு நாட்டின் புறத்தோற்றப் பொலிவாக விளங்குகின்ற 'நாகரிகத்தை' வளர்க்க ‘அறிவியல்' பெருந் துணையாக அமைகிறது; அகத்தோற்றப் பொலிவாக விளங்கு கின்ற 'பண்பாட்டை வளர்க்கக் கலையியல்' உற்ற துணை யாகத் திகழ்கிறது. அழகுக் கலைகள் உலகில் அறிவியற் கலைகளையையும், அழகுக் கலைகளை யும் எந்த நாடு செம்மையாகவும், சிறப்பாகவும், முறையாக