198 படங்களோடும் அவர் எடுத்துக் கூறினார். கண் மழுங்கிய நிலையிலும் சீமைச் சுண்ணாம்புக் கட்டிக்கொண்டு கரும் பலகையில் படங்களையும், சிந்துவெளி எழுத்துக்களையும் நிதானத்தோடு எழுதிக் காட்டி விளக்கந் தந்தார். ஈராசுப் பாதிரியார் அப்பொழுது பேசிய பேச்சிலே மிகவும் வியப்புக்குரியதும், போற்றிப் புகழத்தக்கதுமாக இருந்தது, 'திராவிட நாகரிகம் எப்படி மேனாடுகளுக்கெல் லாம் பரவிச் சென்றது' என்று விளக்கிக் காட்டியதாகும். கடல் கொண்ட குமரிக்கண்டத்தில் தோன்றிய திராவிட நாகரிகந்தான் பிறகு தென்னாட்டு நாகரிகம் ஆகிப் பிறகு மொகெஞ்சொதரோ - அரப்பா நாகரிகமாக ஆயிற்று என்றும், அந்தச் சிந்துவெளி நாகரிகம் பிறகு சுமேரியா நாகரிகமாக மாறிற்று என்றும், பிறகு சுமேரியா நாகரிகம் எகிப்திய நாகரிகம் கிரேக்க நாகரிகமாகவும், பிறகு கிரேக்க நாகரிகம் உரோமானிய நாகரிகமாகவும், பிறகு உரோமானிய நாகரிகம் சுபெயின் நாகரிகமாகவும், பிறகு சுபெயின் நாகரிகம் பிரிட்டானியா நாகரிகமாகவும் மாறி. மேனாடு முழுவதும் பரவிற்று என்றும் தக்க ஆராய்ச்சிக் கருத்துக்களால் நிலைநாட்டினார். மொழி நாகரிகம் பண்பாடு - எண்ணைப் பத்து வரையிலும் எண்ணும் பழக்கம்- ஆண்டை ஞாயிற்றைக் கொண்டு கணக்கிடுவது - மாதத்தைத் திங்களைக் கொண்டு கணக்கிடுவது-வாரத் திற்கு ஏழு நாட்கள் என்று கொள்ளுவது—ஒவ்வொரு நாளையும் ஞாயிறு, திங்கள், கோள்கள் ஆகியவற்றின் பெயரால் அழைப்பது என்பன போன்றன, திராவிட நாகரிகம் கற்றுக் கொடுத்த பாடந்தான் என்பதைப் பிறமேற் கத்திய மொழிகளிலிருந்து சான்றுகள் காட்டி விளக்கினார். ஈராசுப் பாதிரியார் கீழைநாட்டு - மேலைநாட்டு மொழி களில் பதினாறு மொழிகளில் நன்கு எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டிருந்தார். . அவர் தமது மூன்றுநாள் சொற்பொழிவை ஆற்றிவிட்டு, மூன்றாவது நாள் பேசி உட்காரும்போது, Hitherto Father
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/200
Appearance