உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 Heras was not Speaking to you but a Dravidian from Spain (இதுவரையில் உங்களிடம் பேசிக் கொண்டிருந்தது ஈராசுப் பாதிரியார் அல்லர்; சுபெயின் நாட்டிலிருந்து வந்த ஒரு திராவிடரே பேசிக் கொண்டிருந்தார்) என்று பேசி நானும் என்னைப் போன்ற விட்டு உட்கார்ந்தார். மாணவர்களும் அவரது இறுதிச் சொற்றொடர் கேட்டு மண்டபம் அதிரக் கையொலி முழக்கினோம். இளவல் மறுநாள் காலை நானும், எனது இரா.செழியனும், பிற நண்பர்களும் ஈராசுப் பாதிரியார் தங்கியிருந்த விருந்தினர் விடுதிக்குச் சென்றோம். அவர் அன்போடு எங்களை வரவேற்று, இனிமையாக ஒரு இரண்டு மணிநேர காலம் எங்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். "தங்களுக்குத்தான் கண்கள் இரண்டும் மங்கி மழுங்கி விட்டனவே! எப்படிப் படிக்கிறீர்கள்? எப்படி எழுதுகிறீர் கள்?" என்று கேட்டேன். அவர் தம்முடன் இருந்த இரண்டு மாணவர்களையும் அழைத்து, அவர்கள் இருவரையும் இரண்டு பக்கத்திலும் இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு, "இந்த இருவருந்தான் எனது இரண்டு கண்கள்" என்று சொல்லிவிட்டுப் புன்னகை புரிந்தார். நாங்கள் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு எழுந்திருக்கும்போது, "தாங்கள் நேற்றைய சொற்பொழிவின் இறுதியில் குறிப் பிட்ட சொற்றொடரை அப்படியே எழுதித் தாங்கள் கையெழுத்துப் போட்டுத் தரவேண்டும்' என்று நான் அவரிடம் விரும்பிக் கேட்டுக்கொண்டேன். அவரும் அன்புடன் அப்படியே கையெழுத்துப் போட்டுத்தர இசை தார். நான் என் கையிலிருந்த பெரிய சங்க இலக்கிய நூலை விரித்து நீட்டினேன். அவருடன் இருந்த மாணவர் ஒருவர் பேனாவை உறைநீக்கி அவரிடம் கொடுத்து, அவர் கையைப் பிடித்து ஏட்டில் வைத்தார். ஈராசுப் பாதிரியார் எழுதத் தொடங்கினார். ஒரு வரி எழுதி முடித்ததும் "போதும் நிறுத்துங்கள்; அடுத்த வரிக்கு வாருங்கள்! என்று அந்த மாணவர் சொல்லிப் பாதிரியாரின் கையைப் பிடித்து அடுத்த வரி எழுத வைத்தார். இப்படியாகவே .