உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 200 ஒவ்வொரு வரியையும் அவர் எழுதினார். அவர் எழுதியது 1, The undersigned, am a Dravidian from Spain 14th 1ll'42 H. Heras. S.J. (கீழே கையொப்பம் இட்டுள்ள நான் சுபெயின் நாட்டிலிருந்து வந்த ஒரு திராவிடன். 14- 3-42 எச். ஈராசு எசு. சே.) என்பதாகும். அவர் எழுதித் தந்தது தான் அப்படியே இங்கு வெளியிடப்பட்டிருக்கிறது. அப்படியெல்லாம் திராவிட மக்கள் மறக்க முடியாத அருந்தொண்டுகள் பல ஆற்றிவந்த ஈராசுப் பாதிரியார் தமது 67 ஆம் வயதில் 14-12-1955 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார் என்ற செய்தி நம்மையெல்லாம் துக்கத்திலும் துயரத்திலும் ஆழ்த்துகிறது. அவரது இழப்பு அவ்வளவு எளிதில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவர் தம் இறுதிக் காலத்தில் பம்பாய் சேவியர் கல்லூரியில் 'வரலாறு -பண்பாடு' துறை துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். 'இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கூடத்தோடும் அவர் நீண்டகாலத் தொடர்பு கொண்டிருந்தார். அவர் எழுதிய நூல்களும் கட்டுரைகளும் பலப்பல. அவற்றில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது 1953ஆம் ஆண்டில் வெளிவந்த "இந்திய - மத்திய தரைப் பகுதிப் பண்பாட்டின் அடிப்படைபற்றிய ஆராய்ச்சிகள்” (Studies in Proto-Indo- Mediterranean Culture என்னும் நூலாகும். அதன் விலை ரூ. 175. அந்த நூலைப் பலபடப் பாராட்டிப் பேரறிஞர் கள் பலர் இதழ்களில் எழுதியுள்ளார்கள். ஈராசுப் பாதிரியார் திராவிட மக்களுக்குச் செயற்கரிய பலன் செய்த பெரியாராவார். அப்பெரியாரின் தொண்டு திராவிட மக்களுக்கு நல்ல ஊக்கம் அளிப்பதாக! அவரது புகழ் என்றும் நின்று நிலவுவதாக!