26. பேராசிரியர் பெர்ட்ரண்ட் ரசல் எகிப்துமீது ஈடன் அரசாங்கம் படைகளை அனுப்பிய பொழுது, இங்கிலாந்தில் பலத்த கண்டனம் எழுந்தது. அவற்றில் மிகக் கடுமையான கண்டனம்-" பைத்தியக் காரத்தனமான வெறிச்செயல்'" என்ற கண்டிப்பு, பேரறிஞர் ரசல் என்பவரிடமிருந்து வந்தது. அவர் தத்துவஞானி, அரசியலில் அன்றாடக் கொந்தளிப்புகளுக்கு அப்பாற் பட்டவர். இருந்தாலும், அநீதியொன்று நிகழ்ந்துள்ளது என்றதும், அது இழைக்கப்பட்டது தமது நாட்டின் பிரதம மந்திரியால் - அரசாங்கத்தால் என்று தெரிந்ததும், அந்த அறிவாளர் கண்டிக்கத் தயங்கவில்லை. கண்டிக்க வேண்டும் என்ற அளவுக்கு மட்டும் கண்டித்து விடவில்லை; கடுமையான சொற்களாலும் கண்டித்தார். அவருக்குத் தற்பொழுது வயது 84; தள்ளாத வயது; - நீண்ட உழைப்பின் பிறகு ஓய்வுவேண்டிய காலம். இருந்த போதிலும், தமது நாடு எகிப்தின்மீது அநீதி விளை விக்கின்றது என்றதும், தமது நாடு என்றும் பாராமல் கண்டிக்க முன்வந்தார். என்று அறிவாளர் ரசலின் வாழ்நாள் பூராவும், அநீதிகளைப் பொய்களைத் தேடிப்பிடித்துக் கண்டிப்பதில் செலவழிக்கப் பட்டுள்ளன கூறலாம். அநீதியைக் கண்டிக்க அவர் என்றும் தயங்கியதில்லை. பொய்யை எடுத்து வெளிப் படுத்த அவர் பின்வாங்கியதில்லை. அது பிரதமமந்திரி யானாலும் சரி, போப்பாண்டவராயிருந்தாலும் சரி. அவர் ¥.—la
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/203
Appearance