202 களை எதிர்த்துப் பேச அவர் தயங்கியதில்லை. நீதிக்காகப் பரிந்து பேசிய, 'குற்றத்துக்குப்' பல இன்னல்களையும் அவர் ஏற்றிருக்கிறார். பேரறிஞர் ரசலின் வாழ்க்கை வரலாறு மிக வேடிக்கை யானது. அவர் பிறந்தது ஒரு பிரபுக் குடும்பத்தில். "ரசல்’ குடும்பம், பல நூற்றாண்டுகளாகப் பிரசித்திபெற்ற அரசியல் பிரபுக் குடும்பம். அதைச் சேர்ந்த பலர், அரசியலில் மதிப்பு வாய்ந்தவர்களாக இருந்துள்ளனர். பெர்ட்ரண்ட் ரசலின் பாட்டனாரான ஜான் ரசல் என்பவர் இங்கிலாந்தின் பிரதம மந்திரியாகவே இருந்தார். தந்தையைப் போல, பெர்ட்ரண்ட் ரசலின் தாயும் பிரபுவம்சத்தில் பிறந்தவள். பிரபுக்கள் சூழ்நிலையில் பிறந்த ரசல், பிற்காலத்தில், அந்தப் பட்டத்தை வேண்டாமென்று ஒதுக்கும் நிலைக்கு வந்தார். ரசலின் முழுப்பெயர், "பெர்ட்ரண்டு ஆர்தர் வில்லியம் ரசல்" என்பதாகும். அவர் பிறந்தது 1872 மே மாதம் 18இல். அவருக்கு மூன்று வயதாகும் பொழுது தாய் இறக்க, பாட்டியாரால் (தாயின் தாயார்) வளர்க்கப்பட்டார். பாட்டி, பிரபுக்களின் பெருமையில் திளைத்தவராதலால், பேரனைச் சன்மார்க்கனாக, கிருத்துவ மதக் கோட் பாடுகளில் நம்பிக்கையுள்ளவனாகக் கொண்டுவரப் பாடு பட்டார். மாளிகையில் மதகுருவும் மற்ற ஆசிரியர்களு ம் வந்து பாடஞ் சொல்லித் தந்தனர். ஆங்கிலத்துடன், பிரெஞ்சு, செர்மன் மொழிகளையும் அவர் நன்கு கற்றுக் கொண்டார். பதினெட்டாவது வயதில் ரசல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்குச் சென்றார். அதிகம் பேசாத, கூச்சமுள்ள மாணவனாக இருந்தார். அவர் எடுத்திருந்த பாடம் முதலில் கணிதம்: பின் தத்துவம். இரண்டு அறிவுத் துறைகளும் அவரை எப்பொழுதும் சிந்தனையில் ஆழ்த்தி வைத்திருந்தன. பல்கலைக் கழக முடிவுகளில், ரசல் முதலா வதாக, அதிகச் சிறப்புக்களுடன் தேறினார்.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/204
Appearance