203 குடும்பப் பழக்கப்படி, ரசல் அரசியலில் ஈடுபடுமாறு செய்யப்பட்டார். பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறும் பொழுது, பாரிசிலிருந்த ஆங்கிலத் தூதுவர் அலுவலகத்தில் அவருக்கு ஒரு வேலை காத்திருந்தது.அங்குச் சிலமாதங்கள் தங்கியதும், பெர்லின் நகர் சென்றார். அவருடைய மனம் போக்கு வேறு துறைகளில் ஈடுபட்டிருந்ததால், அரசியல் வேலைகளில் அவருடைய ஆர்வம் செல்லவில்லை. பெர்லினிலிருந்து திரும்பிவந்த தன் மனைவியுடன் (அவர் பாரிசு சென்ற ஆண்டு, அதாவது 1894-இல் திருமணம் புரிந்து கொண்டார்) இங்கிலாந்துக்குத் திரும்பி வந்தார். ஒரு சிற்றூரில் போய்க் குடியேறி, தத்துவ ஆராய்ச்சியில் தன் முழுநேரத்தையும் செலவிட்டார். பிரபுப் பட்டங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை. பரம்பரையாக வந்த பெருமையை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்தார். வீட்டி லிருந்து, பிரபுக் குடும்பத்தவர் என்ற பரம்பரை உரிமையிலிருந்து, வரும் பணத்தை இவர் எடுத்துக் கொள்ள வில்லை. சொந்த உழைப்பால் பொருள்தேடி, மிக எளிய வாழ்க்கையை இவர் மேற்கொண்டார். கணிதத்தையும், தத்துவத்தையும் நாள் பூராவும் ஆராய்ந்ததால். அவருடைய அறிவுத்திறன் வளர்ந்ததென்றாலும், உடல் மிகவும் தேய்ந்து வந்தது."எலும்புகளின் மீது நடமாடும் வாய்ப்பாடுபோல அவர் இருந்தார்" என்று, அப்பொழுது இவரைப் பார்த்த ஒருவர் குறிப்பிட்டார். f 1900இல் பாரிசு நகரில் "கணித மாநாடு" ஒன்று நடந்தது. அதற்கு ரசல் சென்றிருந்தார். அப்பொழுது நடந்த விவாதங்கள் ரசலின் கவனத்தைக் கணிதத் துறைக்கு முழுவதும் ஈர்த்தன. இங்கிலாந்து திரும்பியதும், மூன்று ஆண்டுகள் கணிதத்துறையின் அடிப்படைகளை ஆராய்ந் தார். 1903இல் “கணிதத்தின் அடிப்படைகள்" என்ற அவருடைய நூல் வெளிவந்தது. பிறகு கணிதப் பேராசிரியர் வொயிட்கெட் என்பவர் துணையுடன், "பிரின்சிபியா மாத்தமாட்டிக்கா (கணிதக் கோட்பாடுகள்) என்ற நூலை
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/205
Appearance