204 எழுத ஆரம்பித்து, 1910இல் அதனை வெளியிட்டார். கணிதத் துறையில் தலைசிறந்த நூல்கள் வரிசையில் இந்த இரண்டும் இடம் பெறுகின்றன. 20ஆம் நூற்றாண்டின் முதற் பாதியில் வெளிவந்த ஒரு சில உயர்தர நூல்களில், கணிதம் பற்றி ரசல் எழுதிய நூலும் ஒன்று ஆகும். 1910இல் ரசல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆசிரிய ராக நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழகச் சூழ்நிலையில் ரசல் கணிதத்திலும் தத்துவத்திலும் முன்னிலும் அதிக ஆர்வத் துடன் ஈடுபட்டிருந்தார். சிந்தனையில் மூழ்கி, வெளி யுலகை ரசல் மறந்திருந்தார். 1914இல் வெளியுலகு அவரைத் தட்டி எழுப்பியது அதிர்ச்சியுடன். ஆனால், 1914- இல் மூண்ட முதல் உலகப்போர் அவரைச் சிந்தனை உலகிலிருந்து மண்ணுலகுக்கு அழைத்து வந்தது. வாய்பாடு, கொள்கை, கோட்பாடு, ஆரம்பம், முடிவு, அடிப்படை உண்மை, இவைகளில் உழன்று கொண்டிருந்த மனம், சேனைகள், துப்பாக்கி, சண்டை, இரத்தம், சாவு இவைகளைப் பார்த்துத் திடுக்கிட்டது. கணிதத்தையும் தத்துவத்தையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்து, "சண்டை கூடாது" என்று பிரசாரம் செய்ய ரசல் இறங்கினார். எதிரி நாடு மட்டு மின்றி, தனது நாடும் குற்றங்கள் செய்துள்ளன வென்று அவர் இடித்துக் காட்டினார். போர் முயற்சி களுக்குத் தடையாக இருப்பதாக ரசல் குற்றஞ் சாட்டப் பட்டார். ரசல் கோர்ட்டில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார். "பிரபுவின் பிள்ளை - பேராசிரியர் குற்றவாளிக் கூண்டில்" என்ற செய்தி, நாட்டில் ஆச்சரியத் தையும், மற்றொரு பக்கம் அதிர்ச்சியையும் தந்தது. தான் சொல்லியதையோ எழுதியதையோ, எதையும் திரும்ப வாங்க ரசல் மறுத்தார். கோர்ட் அவரைக் குற்றவாளியெனத் தீர்ப்புக் கூறி 100 பவுன் அபராதம் விதித்தது.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/206
Appearance