உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 அவர் செய்த குற்றமென்ன? "போர் கூடாது, அமைதி வேண்டும்" என்று கூறியது. அபராதம் கட்டப்படவில்லை. ரசல் கடுங் கோபத் துடன், அரசாங்கத்தை எதிர்த்து நின்றார். அரசாங்கத் தினர் அபராதத்தை வசூலிக்க உத்தரவிட்டனர். ஏராளமாக புத்தகங்கள் போலீசார் ரசலின் வீட்டில் புகுந்தனர். பேராசிரியர் வீட்டில் என்ன இருக்கும்? புத்தகங்கள் இருந்தன. அபராதத்திற்காக ரசலின் கைப்பற்றப்பட்டன. தான் அருமையாகப் போற்றி, நண்பர்களைப் போலப் பாராட்டி வந்த பல நூல்கள் அகற்றப்படுவதை, ரசல் வேதனையுடன் பார்த்தபடி இருந்தார். அரசாங்கம் கைப்பற்றிய புத்தகங்களை. ரசலின் நண்பரொருவர் ஏலத்தில் எடுத்து, ரசலிடம் திருப்பிக் கொடுத்தார்; ஆனால், பல அருமையான நூல்கள் காணாமற் போய்விட்டன. அரசாங்கத்தின் தாக்குதல் ஒருபுறமிருக்க, மற்றொரு பக்கம் பல்கலைக் கழகம் தாக்கியது. ஆசிரியர் பதவியி லிருந்து ரசல் நீக்கப்பட்டதாக உத்தரவு வந்தது. கேம்பிரிட்ஜில் வேலை போனதும், அமெரிக்காவில் ஆர்வர்டு பல்கலைக் கழகம் ரசலுக்கு ஆசிரியர் பதவி தந்து அழைத்தது. ஆனால் அமெரிக்காவுக்குப் போக ரசலுக்குப் "பாஸ்போர்ட்' வழங்க இங்கிலாந்து அரசாங்கம் மறுத்தது. ரசலுக்கு உள்நாட்டில் வேலை போயிற்று. மேலை நாட்டில் வேலை பார்க்கப் போவதற்கும் அனுமதிக்கப்படவில்லை. அரசாங்கத்தின் கடும் தாக்குதல் ரசலை வறுமை நிலையில் தத்தளிக்கச் செய்தது. இந்தக் கட்டத்தில்கூட, தன் பரம்பரைச் சொத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தைப் பெற ரசல் மறுத்தார். பிரபு - சாதாரணமானவர், முதலாளி - தொழிலாளி என்ற பாகுபாடுகள் ஒழிய வேண்டுமென வாதிப்பவர் ரசல். அந்த வேற்றுமைகளை எதிர்க்கும்பொழுது, அதனால் சொந்தமாகப் பலன் வருகிற