உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 தென்றாலும், தியாகம் செய்ய அவர் முன்வந்தார். உள்ள உறுதியை இழந்திடாமல் அவர் அரசாங்கத்தின் கொடுமைகளை ஏற்றுப் போராடினார். . பல்கலைக்கழக வேலை போனதும், இலண்டனில் சில சொற்பொழிவுகள் மூலம் வருவாய் தேடித்தர, ரசலின் நண்பர்கள் ஏற்பாடு செய்தனர். அறிவாளர்கள் பேசுகின் றனர் என்றால், நுழைவுக் கட்டணம் வைத்து, பொருள் தேடும் முறை அங்கு இருந்தது. மக்களும் கூடிப் பேச்சுக் களைக் கேட்டுச் செல்வர். ரசலுக்கு அவ்விதக் கட்டணக் கூட்டங்கள் ஏற்பாடு செய்வதை அறிந்த அரசாங்கம், அந்தக் கூட்டங்களுக்கு வெவ்வேறு வகைகளில் தடை போட்டு, அவை நடைபெற முடியாதபடி செய்தது. ரசல் இவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லை. சொற்பொழிவுகள் தடுக்கப்பட்டதும், பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதி, அதனால் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தம் வாழ்க்கையை நடத்தினார். அரசாங்கம் அங்கும் ரசலை விட்டுவைக்கவில்லை. "டிரிப்யூன்" என்ற பத்திரிகையில் ரசல் எழுதிய கட்டுரை ஆட்சேபகரமானது என்று கூறி, ரசல் மீது வழக்குத் தொடுத்தது. பெர்ட்ரண்ட் ரசல் ஆறுமாதம் தண்டிக்கப்பட்டார். தமது கருத்துக்களை மாற்றிக்கொள்ள மறுத்தார். தண்டனையை ஏற்றுக்கொண்டார். புகுந்தார். அவர் சிறை தத்துவங்களை ஆராய்ந்து வேதாந்தம் பேச வேண்டியவர், பல்கலைக் கழக அறைகளுக்கு அப்பாற்பட்ட உலகில் புகுந்து, கலகம் விளைத்து, கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டது உலகுக்கு அதிர்ச்சியைத் தந்தது. ரசலைப் பற்றி எழுதிய வில்துராண்ட் என்ற அமெரிக்கத் தத்துவஞானி பின்வருமாறு குறிப்பிடுகிறார். 'இதுவரை கணிதம் தத்துவம் இவைகளின் பாரந் தாங்காது