உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207 உலகம் அமிழ்ந்துபோய்,உறைந்துபோன பனிக்கட்டியைப் போலக் கிடந்த பெர்ட்ரண்ட் ரசல் திடீரென வெடித்து எழுந்தார். பனிக்கட்டி உடைந்தது; தீப்பொறி பறந்தது; திடுக்கிட்டது. அவர் ஒற்றை நாடியாகவும் இரத்த சோகையால் வெளுத்தும் காணப்பட்ட பேராசிரியர் மட்டுமல்ல, உயர்ந்த மனிதாபிமானமும் அளவற்ற மனவுறுதியும் படைத்த மனிதர் என்பதை உலகம் உணர்ந்தது. அறிவியல் கோட்பாடுகளைவிட்டு ஆராய்ச்சி யாளன் வெளியே வந்தான். அரசியல் வாதிகளைச் சாடினான். கடும் கண்டனங்களை வெள்ளமெனப் பாய்ச் சினான். அதிகாரம் பதவி எதுவும் எதிர்நிற்கவில்லை அதிகாரமும் ஆதிக்கமும் கையிலே வைத்துப் பாரைக் கட்டி ஆண்ட அரசியல் தலைவர்களும் அவரது கண்டனத்துக்கு ஆளாயினர். பல்கலைக் கழகம் அவரை வேலையினின்றும் விரட்டியபோதிலும் கண்டனம் நிற்கவில்லை. மற்றொரு கலீலியோவைப் போல அவர் போராடினார். அவருடைய அறிவையும் கருத்துக்களையும் புரியாதவர்கள்கூட, அவருடைய கொள்கை உறுதிகண்டு வியந்தனர். ஆனால், அவருடைய கருத்துக்கள் பல, இங்கிலாந்தில் இருந்தவர் களுக்குக் கசப்பாக, கடுமையாக இருந்ததால், எதிர்ப்பு நாலாபக்கங்களிலும் சூழ்ந்தது. பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், சமூகம் அவரை விரட்டியடித்தது. சண்டையிலீடுபட்டிருந்த நாடு, சமாதானம் பேசிய அவரைத் "தேசிய துரோகி" எனத் தூற்றியது. . படித்த பல்கலைக் கழகம்-ஆசிரியராகப் பணியாற்றிய பல்கலைக் கழகம் - அவரை விரட்டியது! பிரபுக்களை விட்டு அவர் விலகி வந்தார். பிரபுக்கள் கூட்டம் இப்பொழுது தூர நின்று அவர் படும் பாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது! அரசாங்கத்தின் கோபம் அவர்மீது அவரைச் சுற்றித் தடைகள் வீசப்பட்டன? பாய்ந்தது;