19 வும், வகையாகவும் வளர்க்கின்றதோ அந்த நாடு நாகரிக மேம் பாட்டையும், பண்பாட்டு உயர்வையும் மிக நல்ல முறையிலே பெற்று விளங்கும் என்பது கண்கூடு. இந்த இலக்கணத்தை முழுமையாகப் போற்றி வளர்த்த காரணத்தால்தான், பண்டைத் தமிழகம் உலகநாடுகளிடையே நாகரிகத்திலும் பண்பாட்டிலும் மிக மேம்பட்டு விளங்கிற்று. தமிழகம் இடைக்காலத்திலும் பிற்காலத்திலும் அறிவியலை வளர்க்கத் தவறிவிட்டது என்றாலும், அழகுக் கலைகளை வளர்க்கத் தவறவில்லை. தமிழகம் வளர்த்த அழகுக் கலைகளில், இன்றைக்கும் உலகம் போற்றிப் பாராட்டி வாழ்த்தி வரவேற்கும் நிலையில் சிலபல அழகுக் கலைகள் தமிழகத்திற்குப் புகழையும் பெருமை யையும் சேர்த்துக் கொண்டிருக்கின்றன. அவைகளில் மிகச் சிறப்பித்துச் சொல்லக்கூடியவைகள்: 1. இலக்கியக் கலை 2. இசைக் கலை 3. நாட்டியக் கலை 4. சிற்பக் கலை 5. கட்டடக் கலை 6. சித்தமருத்துவக் கலை 7. தையற் கலை போன்றவைகளாகும். தொல்காப்பியம், திருக்குறள், அகநானூறு, புறநானூறு. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை பரிபாடல், பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு, நாலடியார். சிலப்பதிகாரம், மணிமேகலை, கல்லாடம், பெருங்கதை, தேவாரம், திருவாசகம், நாலாயிரப் பிரபந்தம், பெரிய புராணம், சீவகசிந்தாமணி, கம்பர் காவியம்,வில்லிபாரதம்,
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/21
Appearance