உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 சமூகம் அவரைப் புறக்கணித்தது, சட்டம் அவர்மீது குற்றங்களைச் சாட்டியது; தண்டனைகளைத் தந்தது; சிறைக்கு அனுப்பியது! பிறந்த நாடு அவரைத் "தேசத் துரோகி" எனத் தூற்றியது! இவ்வளவுக்கும் அவர் செய்த குற்றம், சமாதானத் திற்காகப் பேசியதுதான். சமாதானத்திற்காக அவர் பேசினார்; சண்டையில் ஈடுபட்டிருந்த அரசாங்கம் அவரை அல்லற்படுத்தியது. அமைதி வேண்டுமென்று அவர் கூறினார்; அதிகாரத் திலிருந்தவர்கள் அவரைத் தண்டித்தனர். ஏகாதிபத்தியங்கள் போகவேண்டுமென ரசல் கூறினார்; ஏகாதிபத்தியத்தின் தலைமை பீடமாக விளங்கிய இங்கிலாந்து, "தேசத் துரோகி" என அவரைத் கொடுமைப்படுத்தியது. ' தூற்றியது: பொருட்படுத்த மனம் தாம் படும் கொடுமைகளை ரசல் வில்லை. சண்டை வெற்றி இவைகளின்பின் மறைந்துள்ள பயங்கரக் கொடுமைகளை எண்ணி, அவர் மனம் பதறினார். அந்தக் கொடுமைகளை அனுபவித்தாலும் பாதகமில்லை என்று அவருக்குப் பட்டது. ஒரு ஏகாதிபத்தியத்தைக் காப்பாற்ற, பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படைகளில் அணிவகுத்துச் செல்வதைக் காண அவர் புழுங்கினார். "ஏகாதிபத்தியத்தைக் காப்பாற்ற எண்ணற்ற இளைஞர்கள் பலியிடப்படுகின்றனர் ! இந்த இளைஞர்களின் உயிர்களைவிட ஏகாதிபத்தியப் பெருமை பெரிதா?" என்று ரசல் கேட்டார். ஏகாதிபத்திய வாதிகளுக்கு மட்டுமல்ல இங்கிலாந்து மக்களுக்கே ரசல் பேசுவது தேசத்துரோகமாகப் பட்டது. ரசல் அத்துடன் நிற்கவில்லை, "இலட்சக் கணக்கான இளைஞர்களின் தூய இரத்தத்தைச் சிந்தி, காப்பாற்றப் போவதாகச் சொல்லப்படும் அந்த