209 ஏகாதிபத்தியம் என்பதுதான் என்ன?" என்ற ஆராய்ச்சியில் இறங்கினார். கணிதத்தில் தத்துவஞானத்தில் ஈடுபட்டிருந்த அவரது ஆராய்ச்சித் திறமை பொருளாதாரம், அரசியல், சண்டை, சமூகம், ஏகாதிபத்தியம் இவைகள் பக்கம் திரும்பியது. ஏகாதிபத்தியத்தின் தன்மையை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, பொருளாதார அமைப்புக்களை ரசல் சீர்தூக்கிப் பார்த்தார். தனிப்பட்ட சொத்துக்களின் அடிப்படையில் ஏழை-பணக்காரர்கள் உண்டாவதுதான் சமூகத்தில் பல சீர்கேடுகள் தோன்றக் காரணமாயிருக்கிறது என்று அவர் கண்டார். எனவே, இக் கேடுகளை நீக்கச் சமதருமம்தான் சிறந்த மருந்தென அவர் தெளிந்தார். சமதர்மத்தைப்பற்றி அவர் பேசத் தொடங்கியதும், அவரைச் சூழ்ந்த எதிர்ப்பு இன்னமும் அதிகமானது. கணித வல்லுநர், தத்துவ ஞானி, இவைகளிலிருந்து யுத்தத்தை எதிர்க்கப்போய்த் "தேசத் துரோகி"யாகி, ஏகாதிபத்தியத்தை எதிர்த்துச் சமதர்மவாதியாக ரசல் ஆனார். அடுத்த கட்டத்தில் மதங்களை எதிர்த்து மதத் துரோகியாகவும் அவர் ஆனார். விஞ்ஞானத்திலும் கணிதத்திலும் பேராசிரியர் ரசல் காட்டிய ஆராய்ச்சித் திறமை, மதத்துறையின் பக்கம் திரும்பியது. அவரது கேள்விகள் மதத்தலைவர்களைத் திக்குமுக்காடச் செய்தன. பழங்கால நம்பிக்கைகள் கேலிக் குரியவையாயின. அதிலும் கிருத்துவ மதத்திலிருந்த மூட நம்பிக்கைகளும், அந்த மூட நம்பிக்கைகளைக் காப்பாற்றக் கிருத்துவ குருமார்களும் போப்பாண்டவர் களும் நடத்திய கொடூரச்செயல்களும், நேர்மையை அடிப் படையாகக் கொண்ட ரசல் உள்ளத்தில் பெரும் புயலைக் கிளப்பின. சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் குருட்டு மனப்பான்மையை எதிர்த்து, ரசல் "எழுத்துப் போர்" தொடங்கினார் எனலாம். "இந்த உலகிலுள்ள சீர்கேடுகளையும் ஒன்றுக்கொன்று முரண்பாடான அமைப்புக்களையும் காணும்பொழுது, ஒரு
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/211
Appearance