210 என்னால் கடவுள் இந்த உலகைப் படைத்தார் என்று எண்ணமுடியவில்லை. யாரோ ஒரு கல்நெஞ்சம் படைத்த கொடுமையாளன், மிக ஈவு இரக்கமற்ற நிலையில் இருந்த பொழுது படைத்தான் என்று வேண்டுமானால் இருக்கலாம்" என்று, ரசல் ஓரிடத்தில் வேடிக்கையாகக் கூறினார். "கிருத்துவ மதத்தை எதிர்த்தவர் உயிருடன் எரிக்கப் பட்டார்கள். கிருத்துவ மதத்தை முழுவதும் ஆதரிக்காத வர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். கிருத்துவ மதத் தின் அதிபர்களான போப்பாண்டவர்கள் ஆதிக்கம் பெற்று, ஐரோப்பாக் கண்டத்தை ஆட்டிப் படைத்தபொழுது, 'இன்கியுசிசன்" என்ற மத விசாரணைக் கோர்ட் மூலம் பல கொடுமைகளைச் செய்தனர். கிருத்துவக் கோட்பாடுகளை முற்றிலும் எதிர்த்தவர்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப் பட்டது மட்டுமல்லாமல், கிருத்துவ மதத்திற்குள்ளேயே தோன்றிய மற்ற மதப்பிரிவினர்களும் சித்திரவதை செய்யப் பட்டனர். கிருத்துவ மதத்தின் இரத்தக்கறை படிந்த வரலாறு ரசலின் உள்ளத்தைக் குலுக்கியது. அன்பு, அறம், கருணை இவைகளை அடிப்படையாகக் கொண்டபோதிலும், மதங்கள் எந்த இடத்தில் தவறுகின்றனவென்று ரசல் தெள்ளத் தெளிய விளக்கினார். "கிருத்துவின் பத்துக் கோட் பாடுகள் மிக நன்றாயிருக்கின்றன. ஆனால் மனித உள் ளத்திலும் வரலாற்றிலும் அவைகளினால் ஏற்பட்ட விளைவு ய வேறாக உள்ளது கிருத்துவைப் பின்பற்றியவர்கள், எதிரியை நேசித்தார்கள் என்றோ, ஒரு கன்னத்தில் அடித் தால் மற்றொரு கன்னத்தைக் காட்டினார்கள் என்றோ கூற முடியாது. அதற்குப் பதிலாகச் சித்திரவதை நிறைந்த இன்கியுசிசனையும், நெருப்புக் குண்டத்தில் மனிதனைப் போட்டு எரிப்பதையும் அவர்கள் கற்றுக்கொண்டார்கள். மனிதனுடைய அறிவை மதகுருமார்களின் ஏதேச் சாதிகாரத்துக்கும் அறியாமை யிருளுக்கும் அடிமைப்படுத் தினார்கள். கலையுணர்வை மூட நம்பிக்கைக்குத் தாழ்த்தி னார்கள். விஞ்ஞான வளர்ச்சியை ஆயிரமாண்டுகளாகச்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/212
Appearance