211 சிதைக்க முயன்றார்கள். இவைகளெல்லாம் தடுக்க முடியாத விளைவுகள். குற்றம் அவர்கள் மேற்கொண்ட கோட்பாடு களில் இல்லை; அந்தக் கோட்படுகளை அப்படியே ஏற்றுக் கொண்டு காப்பாற்றும் மூர்க்கத்தனமான நம்பிக்கையில் தான் குற்றம் ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு ஆண்டவன் மூர்க்கத்தனமான நம்பிக்கை -அதுதான் மதத்தின் அடிப்படையாகவும் இருக்கிறது. அருளியது", "வேதத்தில் சொல்லப்பட்டது" என்று கூறப்பட்டுவிட்டால், ஒவ்வொரு மத பக்தனும் ஆராய்ந்து பார்க்காமல் அதை ஏற்றுக்கொள்ளுகிறான். இவ்வாறு ஆராய்ந்து பார்க்க வொட்டாமல், வற்புறுத்தப்படும் மூர்க்கத்தனமான நம்பிக்கை, விஞ்ஞான மனப்பான்மைக்கு முற்றிலும் மாறுபட்டது. மூர்க்கத்தனமான நம்பிக்கை, இதைவிட வேறு உண்மை ஏதுவும் கிடையாது என்ற முடிவான நம்பிக்கை ஆராய்ச்சியைத் தடுப்பதுடன், ஆராய்ச்சி செய்பவர்களையும் அழிக்க முன்வருகிறது. இதனால்தான், அன்பு-அறம் இவை களை ஒருபுறம் உச்சரித்தபோதிலும், மறுபக்கம் விஞ்ஞானி களைத் தீயில்போட்டும், சிறையில் தள்ளியும், கைகளை வெட்டியும், கண்ணை அவித்தும் சித்திரவதை செய்யக் கிருத்துவ மதக்குருமார்கள் தயங்கவில்லை. கிருத்துவ மதத் தின் கறைபடிந்த வரலாறுகள், ரசலின் மத நம்பிக்கையை அகற்றின. "நான் ஏன் கிருஸ்தவனல்ல" என்ற நூலில், கிருத்துவ மதத்தில் தான் நம்பிக்கை இழந்ததற்கான காரணத்தை ரசல் விளக்கினார். அந்நூல் வெளிவந்ததும், கிருத்துவ நம்பிக்கையாளரின் எதிர்ப்பு ரசலைச் சூழ்ந்தது. அவர் சொல்லிய காரணங்கள், குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு மட்டுமல்ல, பொதுவாக எல்லா மதங்களுக்கும் முக்கிய எச்சரிக்கையாக அமைந்தது. மதங்களைப் பற்றி ரசல் ஆராய்ந்தபொழுது, மதங்களின் அடிப்படையில் இருக்கும் ஒரு முக்கிய இயல்பை
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/213
Appearance