212 அவர் கண்டார். அதுதான் மறைபொருள் வாதம். ஒன்றை மற்றொன்றாகச் சொல்ல. அதை வேறொன்றாக விளக்கி, குழப்பத்தில் கொண்டுபோய்விடும் வாதங்களை அவர் கண்டித்தார். கணிதத்திலும் விஞ்ஞானத்திலும் ஊறிய அவர்தர்க்க வயப்பட்ட நேர்மையை மட்டுமே ஆதரித்தார். ய "மறைபொருளும், தர்க்கமும்", "மதமும் விஞ் ஞானமும் ஆகிய அவரது உயர்ந்த நூல்கள், பகுத்தறிவுப் பான்மையை வளர்க்கப் பெரிதும் உதவின. உ பகுத்தறிவு வாதிகளின் வரிசையில் ரசல் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றார். பகுத்தறிவையும் உலகப் பற்றிய விஞ்ஞானத்தையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் ஈடுபட்டிருக்கும் பொழுதுதான், முதல் உலக யுத்தம் குறுக்கிட்டு, அவரது போராட்டத்தை வேறுபக்கம் திருப்பியது. "போர் தவிர்க்கப்பட வேண்டும்" என அவர் பிரசாரம் செய்தபொழுது, தமக்கே உரித்தான ஆராய்ச்சித் திறனை, போர், வல்லரசுகள், அரசியல், பொருளாதாரம் இவைகளின் மீது ரசல் திருப்பினார். பொருளாதாரச் சீர்கேடுகளை ஆராயும் பொழுது. தனிப் பட்டச் சொத்துகளின் வரலாறுகளை அவர் கண்டறிந்தார், அடக்குமுறையாலோ, அநியாயத்தாலோ தனிப்பட்டளின் சொத்து கைமாறுகிறது. வைரச் சுரங்கங்களும் தங்கச் சுரங்கங்களும் திருட்டுத்தனத்தால் தனிப்பட்டவர்களில் சொத்தாகிவிடுகிறது. தனிப்பட்ட சொத்துரிமை நிலைப் பதால், சமூகத்துக்கு நன்மை ஏற்படவில்லை என்பதை அவர் கண்டார். சமூகத்தில் நீதியும், நிலையான அமைதியும் நீடிக்க வேண்டுமென்றால், தனிப்பட்ட சொத்துரிமை மாறிச் சமதர்மம் தழைக்கவேண்டும் என்று ரசல் கருதினார். சமதர்மத்தில் ஏற்பட்ட பற்றுதல், அப்பொழுது ருஷியாவில் மலர்ந்த பொதுவுடைமையாளர்களின் ஆட்சிமுறையைக் காண வேண்டுமென்றஆ வ லை உண்டாக்கியது. 1917-இல் ருஷியாவில் புரட்சி மூண்டு, லெனின் தலைமையில் பொது வுடைமையாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றியதும், உலகத்தின்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/214
Appearance