உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213 . கவனம் ருஷியா பக்கம் திரும்பியது. உலகச் சமதர்மவாதி களின் ஆர்வம் ருஷியாவுக்கு உதவியாக இருந்தது. புதிய உலகைச் சமதர்மத்தை அடிப்படையாக் கொண்ட புதிய சமுதாயத்தை ருஷியப் பொதுவுடைமையாளர்கள் உண்டாக்குகிறார்கள் என்ற நல்ல என்ற நல்ல நம்பிக்கை, உலகில் பல்வேறு பகுதிகளில் போராடும் சமதர்ம வாதிகளுக்கும் தொழிலாளர் தலைவர்களுக்கும் உண்டானது. ருஷியாவில் ஏற்பட்டுள்ள புரட்சி நிலைமையையும், பொதுவுடைமை நோக்கத்தையும் நேரில் காணவேண்டுமென்ற ஆர்வத்தில், பிரிட்டிஷ் தொழிற்கட்சி ஒரு தூதுக்குழுவை அனுப்பி வைத்தது. பேராசிரியர் ரசல், அந்த தூதுக்குழுவுடன் சேர்ந்து ருஷியாவுக்கு 1920 மே மாதம் சென்றார். புதிய சமுதாயம் மலருவதைக் காணச் சென்றார். புதிய சமுதாயம் மலருவதை காணச் சென்ற ரசலுக்கு அங்குக் காணப்பட்ட திடுக்கிடத்தக்க பொதுவுடைமை முறைகள் புதிய கேள்வி களை உண்டாக்கின. அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, சமதர்ம அடிப்படைக் கொள்கை சிறந்தது என்ற போதிலும். ருஷியப் பொதுவுடைமை வாதிகள் கையாண்ட முறைகள் சரியானவைகளாக அவருக்குப் படவில்லை. "போல்சிவிசம்" என்று கூறப்பட்ட ருஷியப் பொதுவுடைமைக் கொள்கையை அவர் ஆராய்ந்து, இங்கிலாந்து திரும்பியதும், "போல்சிவிசம் கொள்கையும் நடைமுறையும்" என்ற நூலை எழுதினார்; பொதுவுடைமை பற்றிய இந்த ஆராய்ச்சி நூல், 1920ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. மிக ஆரம்ப காலத்திலேயே, ருஷியப் பொதுவுடைமை வாதிகள் கையாளும் முறைகள் சரியானவையல்ல என்று ரசல் கண்டார். அத்துடன், அவர்களின் கோட்பாடுகளும், கொள்கைகளும், கண்மூடித்தனமான முறையில் வளரு மென்றும் அவர் கூறினார். அந்த நூலின் முன்னுரையில் ரசல் பின்வருமாறு எழுதினார்: "ருஷியப் பொதுவுடைமை வாதிகளிடமிருந்து, அடிப்படையானவிதத்தில் நான் மாறு படுகிறேன். பொதுவுடைமை அவர்களுக்கும் அரசியல்