214 கொள்கையாக நிற்கவில்லை. வேதவாக்குகளும் கோட்பாடு களும் நிறைந்த மதமாக அது அமைந்துவிட்டது! லெனின் போன்றவர்கள்கூட ஏதாவது ஒன்றை விளக்க விரும்பினால், மார்க்ஸ் ஏங்கெல்ஸ் இவர்கள் எழுதியவற்றில் சில வரிகளை ஒப்பிக்கத் தவறுவதில்லை. மூலதனமும் நிலமும் பொது வாக்கப்படவேண்டும் என்ற நோக்கத்தைமட்டும் ஒப்புக் கொள்கிறவன் முழுப் பொதுவுடைமை வாதியாகி விடுவ தில்லை. மிக விரிவான முடிவான கோட்பாடுகளையும், விதிகளையும், அப்படியே ஏற்றுக் கொள்பவனாகவும் அவன் இருக்க வேண்டும். அந்தக் கொள்கைகள் உண்மையானதாக இருக்கலாம். ஆனால் விஞ்ஞானத்தில் இருப்பதைப்போன்ற ஆராய்ச்சி இல்லாத முறையில் கொள்கைளை ஏற்றுக் கொள்ளவேண்டும். முடிந்த முடிவுகளை ஏற்றுக் கொள் வதை விட்டு, ஆராய்ந்து பார்க்கும் திறன் வரலாற்றில் மறுமலர்ச்சிக் காலத்துக்குப்பின் வளர்ந்தது. அது விஞ்ஞான மனப்பாங்காகச் சீர்பட்டது. இந்த விஞ்ஞானப் பண்பாடு மனிதகுலத்தின் பெறற்கரிய பேறு என்றுதான் நினைக் கிறேன். பொருளாதார அமைப்பைச் சீர்படுத்துவதற்கு மக்களின் ஆராய்ச்சி மனப்பான்மை அடக்கப்பட்டு, அறிவாளி இருட்சிறையில் மறைக்கப்பட வேண்டும் என்று கூறப்படுமே யானால், நாம் கொடுக்கும் விலை அதிகம் என்று நான் கூறவேன் னவை 1920இல், ருஷியாவில் பொதுவுடைமை ஆட்சி ஆரம்ப நிலையில் இருந்தது. அப்பொழுது முக்கிய தலைவர்களாக இருந்த லெனின், டிராஸ்கி, கார்க்கி முதலியவர்களை ரசல் நேரில் கண்டு பேசினார். அப்பொழுது ஸ்டாலின் அதிகமாக அறிமுகமாகாத நிலை. ஆனால் ருஷியாவில் ரசல் சொன் பல பின்பு மெய்ப்பிக்கப்பட்டன. 1920ஆம் ஆண்டிலேயே, "கொள்கைகள் மறைக்கப்பட்டு, நெப் போலியன் செலுத்திய ஏகாதிபத்திய ஆட்சிமுறை நிறுவப்படலாம்" என்று ரசல்முன்கூட்டியே அறிவித்தார். பொதுவுடைமையின் பரந்த ஆட்சியிலும், போகப்போக "நாட்டுப்பற்று" தலைதூக்கி, மோதுதல்கள் ஏற்படக்கூடும் என்றும் அவர் அன்று கூறினார். ய
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/216
Appearance