உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 ருஷியப் பொதுவுடைமையில் உள்ள குற்றங்குறைகளை அவர் கூறியபொழுது, முதலாளித்தனத்துக்காக அவர் பேசினார் என்று சொல்லமுடியாது. முதலாளித்துவ முறை அழிக்கப்படவேண்டியது என்ற கொள்கையை வலியுறுத்திய பின்தான், ரசல், ருஷியாவில் காணப்பட்ட "அழிவு, குழப்ப அறிகுறிகளை" எழுதினார். 1920இல் மீண்டும் அது பதிக்கப் பட்டது. "சமதர்மம்", "பொதுவுடைமை" இவைகள் வழக்கத்தில் பெற்றுள்ள வேறுபாட்டை ஒட்டி, அந்தச் சொற்களை ஆங்காங்குத் திருத்தியதல்லாமல், 1948இல் வெளியிடப்பட்ட இரண்டாம் பதிப்பில், அவர் எழுதிய வற்றில் ஒரு வாக்கியம்கூட மாற்றாமல் பதிக்கப்பட்டதாம்! ருஷியாவிலிருந்து இங்கிலாந்துக்குத் திரும்பி, பொது வுடைமைபற்றிய நூலை வெளியிட்டதும், ரசலின் கவனம் இன்னும் தூரக்கிழக்குக்குச் சென்றது. ரசல் சீன நாட்டுக்குச் சென்றார். பீகிங் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக ரசல் பணியாற்றினார். அமெரிக்கா, இங்கிலாந்து, ருஷியா இந்தச் சச்சரவுக்கப்பால், இன்னும் விழித்து எழாமல் இருக் கும் கிழக்குநாடுகள் அவரது கருத்தைக் கவர்ந்தன."பெரும் சண்டைகளில் ஐரோப்பா அழிந்தாலும், கிழக்கு நாடுகள் உலகின் நாகரிகத்தைக் காப்பாற்றிச் செல்லும்" என்று அவர் நினைத்தார். அத்துடன், அறியாமை இருள் மிகுந்த நாட்டில் அறிவொளி பரப்பும் வேலை அவருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. ஆனால் உற்சாகத்தின் அளவை அவரது உடல் வலிவு தாங்கவில்லை. நிமோனியா காய்ச்சலில் ரசல் படுத்த படுக்கையானர். மிகக் கடுமையான காய்ச்கல்! ரசல் உடல் நிலை மிகப் பலவீனமடைந்தது! மருந்துகள் எதுவும் பலனளிக்க வில்லை. "ரசலுக்கு நிமோனியா காய்ச்சல்! மிகக் கவலைக்கிட மான நிலை!' என்று லண்டன் பத்திரிகைகளில் செய்தி