உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 வந்தது. ரசலின் நண்பர்கள் மிகவும் கலங்கிப் போனார் கள். மேற்கொண்டுவந்த செய்திகள் நம்பிக்கையூட்டுவ தாக இல்லை. என்று இந்த நிலையில் "ரசல் இறந்துவிட்டார்" ஐப்பான் பத்திரிகைகள் கொட்டை எழுத்தில் கருப்புக் கோடு போட்டு அறிவித்தன! ரசலிடம் மதிப்புகொண்ட சீனாக்காரர் ஒருவர், ரசலின் பிணத்தைப் புதைப்பதற்கு, புதைப்பதற்கு, ஏரிக்கரையில் ஒரு நல்ல இடத்தை வாங்கித் தயாராக வைத்துவிட்டார்! பத்திரிகைச் செய்திகளைப் பார்த்ததும் ரசலின் நண்பர் கள் பதைத்தார்கள். கலங்கிய கண்களுடன் பல்கலைக் கழகத்துக்கு விவரங்கேட்டுச் செய்தியனுப்பினார்கள். ரசலுடன் பணியாற்றிய ஆசிரியர்கள் ரசலின் விரைந்தார்கள். விடுதிக்கு ரசலின் உயிர் இன்னும் ன்னும் பிரியவில்லை! மரணத்தைச் சந்திக்கும் நிலைதான்! இன்னும் வாழ்வு சிறிது ஒட்டிக் கொண்டிருந்தது! மிக மங்கிய ஒளி, ஆனால் இன்னும் அணைந்துவிடவில்லை! மரணவாயிலில் மூன்று வாரங்களாக ரசல் போராடி னார். அவரைக் கண்காணித்த டாக்டர்கள் - செர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள்; ரசலைப்போலச் சீனாவுக்குப் பணியாற்ற வந்த டாக்டர்கள் - அவர்கள் ரசலிடம் மரணத்தை நெருங்கவிடாமல் போராடினார்கள். கடைசி யாக வெற்றியும் பெற்றார்கள். பத்திரிகைக்காரர்களால் "சாகடிக்கப்பட்டு" சீன நண்பரால் புதைக்கப்படத் தயாராக்கப்பட்ட ரசல், உயிர் பிழைத்தார்! உடல் நிலை சற்று இடங்கொடுத்ததும், ரசல் இங்கிலாந்து திரும்பினார். பின், தோரா பிளாக் என்ற பெண்ணை மணந்து, செல்சி என்ற இடத்தில் ஒரு சிறிய வீட்டில் வாழத் தொடங்கினார். பிரபு வமிசத்தைச் சார்ந் திருந்தும், அதனால் பலன் பெறவிருப்பமின்றி சொற்