பொழிவாற்றுவதன் 217 மூலமும், நூல்கள் எழுதுவதன் மூலமும் கிடைக்கும் பணத்தை வைத்து அவர் வாழ்க்கை நடத்தினார். 1922இல் நடந்த தேர்தலில், பேராசிரியர் ரசல் தொழிற் கட்சிச் சார்பாக நின்றார்; தோல்வியுற்றார்! அடுத்த ஆண்டு தேர்தல்கள் மீண்டும் வந்தபொழுது, மீண்டும் ரசல் தொழிற்கட்சிச் சார்பில் தேர்தலில் நின்றார்; தோல்வி யுற்றார். 1924ஆம் ஆண்டு தேர்தல் வந்தது. இந்தத் தடவை ரசலின் மனைவி தேர்தலில் நின்றார்; தோல்வி யுற்றார். தோல்வியடைந்த ரசலைப்பற்றி இங்கிலாந்தும் உலகமும் தெரிந்திருந்த அளவு, வெற்றியடைந்த பிரதிநிதி யைப் பற்றித் தெரியாது. யான அளவுக்கு உயர்தர விஞ்ஞானத்தை மக்களுக்கெல்லாம் புரியும்படி ஆக்கவேண்டும் என்ற எண்ணத்தில், பேராசிரியர் ரசல், அணுக்கள் பற்றியும், ரிலேடிவிடி தத்துவம் பற்றியும் எளிதான நூல்கள் எழுதினார். அவை 1913லும் 1915லும் வெளியிடப்பட்டன. 1916இல் அவர் எழுதிய கல்விமுறை" என்ற நூல் வெளிவந்தது. 1917இல் "பொருள் ஆராய்ச்சி', 1918இல் "தத்துவங்களின் சுருக்கம்" என்ற தத்துவ நூல்கள் வெளிவந்தன. தொடர்ந்து அவருடைய அறிவியல் கட்டுரைகளும், நூல்களும் பல வெளிவந்தன. < பேராசிரியர் ரசல் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களால் அடிக்கடி அழைக்கப்பட்டார். 1913லிருந்து ஆண்டு தோறும் அவரது சொற்பொழிவுகள் விரும்பிக் கேட்கப் பட்டன. 1938லிருந்து 1944வரை அவர் அமெரிக்காவில் தங்க நேரிட்டது. பல்கலைக் கழகங்களில் சொற்பொழி வாற்றுவதன் மூலம் கிடைக்கும் வருமானம் அவருக்குப் போதுமானதாயிருந்தது. அமெரிக்காவில் இருந்த போதிலும், அமெரிக்க முதலாளித்துவ முறைக்கு அவர் ஆதரவு தரவில்லை. அமெரிக்க முதலாளிகளும் அவருக்குப் பரிவு காட்டவில்லை. 'சிறந்த அறிஞர்' என்ற காரணத்தால் ரசல் சகித்துக் கொள்ளப்பட வேண்டியவரானார். அ. 14 •
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/219
Appearance