உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பட்டினத்தார் பாடல், தாயுமானவர் பாடல், இராமலிங்க வள்ளலார் திருவருட்பா, தேம்பாவணி, தேம்பாவணி, சீறாப்புராணம், சித்தர் பாடல்கள், பல்வேறுவகைப்பட்ட கலம்பகங்கள்- அந்தாதிகள் - அம்மானைகள் - பிள்ளைத் தமிழ்கள் பரணிகள்-பள்ளுகள் போன்றவைகள்,பாரதியாரின் புதுமைக் கவிதைகள், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் புரட்சிக் கவிதைகள் போன்றவைகள் எல்லாம் தமிழ் பெற்றுள்ள இலக்கியச் செல்வங்களாகும். அழிந்துபோன ஏராளமான செல்வங்கள் போக, எஞ்சிய சில இலக்கியச் செல்வங்களே கிடைக்கப்பெற்றுள்ளன. குன்றாப் புகழ்பெற்றவை என்று சொன்னால், அது மிகை யாகாது. தமிழகத்தின் - இந்தச் செல்வங்களெல்லாம் இசைக்கலை-நாட்டிக் கலை - சிற்பக் கலை - கட்டடக்கலை பற்றிய அருந்தமிழ் நூல்கள் தொன்று தொட்டு ஏராளமாக இருந்து, இடையிலே அழிந்து போயிருக் கின்றன. அவற்றைப்பற்றிய மிகச்சிலவான தமிழ் நூல்கள் தாம் இருக்கின்றன. அவைப்பற்றிய சில நூல்கள் வடமொழி யிலும் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன. மூலநூல்களான தனித்தமிழ் நூல்கள் பலவும் கிடைக்கப்பெறாத நிலையில், சிற்சில வடமொழி மொழிபெயர்ப்பு நூல்கள் மட்டும் ஆங்காங்குக் காணப்பெறுகின்றன. தமிழிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சில மொழி பெயர்ப்பு நூல்களான வடமொழி நூல்களையும், தமிழறிவும் வடமொழி அறிவும் படைத்த சில தமிழ் வல்லுநர்கள், இடைக் காலத்தில், காலத்தின் போக்குக்கு ஏற்ப எழுதிவைத்த சில வடமொழி நூல்களையும் வைத்துக்கொண்டு, இசைக் கலை- நாட்டியக் கலை-சிற்பக் கலை-கட்டடக் கலை - கோயில் கட்டடச் சிற்பக்கலை போன்றவைகள் வடமொழியிலிருந்து தான் தமிழ்மொழிக்கு வந்தன என்று சில வீணர்கள் வாதாடிக் கொண்டிருக்கின்றனர். இந்தக் கலைகளெல்லாம் தமிழ்மொழிக்கு உரிமையுடை யனவா? அல்லது வடமொழிக்கு உரிமையுடையனவா? என்ற