உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 1946இல் "மேல்நாட்டுத் தத்துவங்களின் வரலாறு' என்ற உயர்தர நூலை ரசல் எழுதி முடித்தார். கிரேக்க காலத்திலிருந்து தற்காலம் வரை வளர்ந்துள்ள தத்துவங் களில் முக்கியமானவைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் நூல் அது. 1948இல் "அதிகாரமும், தனிப்பட்டவர்களும்” என்ற ரசலின் நூல் வெளிவந்தது. ரசல் எழுதியுள்ளவைகளில் மிக முக்கியமானவைகளாக 25 நூல்கள் இப்பொழுது உள்ளன. 1950இல் பேராசிரியர் ரசலுக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டது. தத்துவ ஞானியாக விளங்கும் அவருக்கு, இலக்கியத்தில் நோபல் பரிசு தரப்பட்டது- அவர் எழுதி யுள்ள நூல்கள் இலக்கியச் செல்வங்களாகக் கருதப்பட்ட காரணத்தால். ல் ரசலுக்கு தற்பொழுது வயது 85. அவருடைய உடல் நலம் எப்பொழுதும் நல்ல நிலைமையில் இருந்ததில்லை. 1920இல் இறந்து போய்விடக்கூடும், இறந்துபோய்விட்டார் என்று கருதப்பட்டவர், தப்பிப்பிழைத்து இவ்வளவு காலம் வாழ்வைக் கடத்தியதே பெரும் செயல்! முதிர்ந்த இந்த வயதிலும், உடல்நிலை தளர்ந்துள்ளதென்றாலும், உலக நிலையைப்பற்றி அவர் கவலைப்படாமல் இருப்பதில்லை. அமெரிக்காவில் உள்ள கல்வி முறையிலிருந்து, எகிப்து நாட்டுப் போர்வரை, அநீதி எங்கு நேர்ந்தாலும், அமெரிக்கா செய்தாலும் தனது தாய்நாடு செய்தாலும், எப்பக்கத்திலும் சாராது, நீதி ஒன்றைமட்டும் சார்ந்து தனது எதிர்ப்பைத் தெரிவித்திடப் பேராசிரியர் ரசல் தயங்கு வதில்லை. உலகப் பகுத்தறிவாளர்கள் அமைப்புத் தலைவராக பெர்ட்ரண்ட் ரசல் உள்ளார். அறிவொளி பரப்பிட வேண்டுமென்று அவருக்குள்ள ஆர்வம், அண்மையில் பம்பாயில் கூடவிருக்கும் இந்தியப் பகுத்தறிவாளர்