உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219 ள மாநாட்டுக்கு அவர் அனுப்பியுள்ள செய்தியில் நன்கு வெளிப்படுகிறது. 22-12-56இல் அவர் எழுதிய கடிதத்தின் இறுதியில், "உலகைப் பேரழிவுக்கு ஆளாக்கும் வகையில் மூர்க்கத்தனமான சக்திகள் இன்று எழுந்துள்ளன. அவைகளை எதிர்த்து நிற்க மனிதகுல வரலாற்றில் இதற்குமுன் என்றுமில்லாதவாறு பகுத்தறிவு மனப்போக்குத் தேவைப்படுகிறது" என்று கூறியுள்ளார். ல இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில், விஞ்ஞாக் மனப்பான்மை வளர்வதற்குப் பெரிதும் பாடுபட்டவர் ரசல் ஆவார்! அவர் விரும்பியிருந்தால், "பிரபு ரசலாக" வாழ்ந் திருக்கமுடியும். பிரபு ரசல் என்பதைவிட, "பேராசிரியர் ரசலாக " இன்னும் பார்க்கப்போனால் அவர் வெறும் "பெர்ட்ரண்ட் ரசலாக" வாழ்கிறார். - அறிவுத்துறையின் உயர்ந்த பகுதியில் நின்று, ஆராய்ச்சிகள் பல செய்து, பேரறிவாளராக விளங்கிய பொழுதும், சாதாரண மக்களுக்குப் புரியும்படியான எளிய நடையில் சமூகத்தைப்பற்றி ரசல் எழுதினார். மனித வரலாற்றில் தலைசிறந்த தத்துவஞானி, அறிவியல் அறிஞர்கள் வரிசையில் உயர்வான இடம் பெறுகின்றார். அதேசமயத்தில் மனிதாபிமான மிக்க சான்றோர், வரிசை யிலும் அவர் இடம்பெறுகிறார். அறிவியல் ஆராய்ச்சி, தத்துவஞானம், கணித வாய்பாடுகள், தர்க்கமுறை - வைகள் அவரது வாழ்க்கையின் மற்றப் பகுதிகளை வரண்டதாக்கவில்லை. உழைப்பாளரிடம், ளரிடம், தொழிலாள் ரிடம், உண்மை நாடுவோரிடம், மனிதனிடம் - அவருடைய அன்பு குறைவில்லை. அறிவால் நிறைந்தவர் ரசல்! அதேகணம் மனிதகுலத்திடம் அன்பால் நிறைந்தவர் ரசல். மூளைமட்டுமல்ல, இருதயமும் நிறைவாக இருக்கும் உலகத்தின் சான்றோர் பேராசிரியர் பெர்ட்ரண்ட் ரசல் ஆவார்! இ வளர்க அவர்தம் வாழ்வு! வாழ்க அவர்தம் வளர்ச்சி!