27. பெத்த நாயக் இப்பொழுது சென்னையில், போலீஸ் கமிஷனர் என்னும் பதவி வகிப்பவர் பார்த்துவரும் வேலையை, வெள்ளையர்கள் குடியேறிய ஆரம்பக் காலத்தில், பெத்த நாயக்' என்னும் பதவி வகித்தவர் பார்த்துவந்தார். பெத்த நாயக்' என்ற பதவியே ஆணை செலுத்துவதிலும், தகுதி பெறுவதிலும் நாளுக்குநாள் உயர்வுபெற்று, இன்றைய நிலைமையில் போலீஸ் கமிஷனர்' என்ற பெயர் பெற்றிருக் கிறது. சென்னை சிதம்பரம் நகரில் (ஜியார்ஜ் டவுன்) பெத்த நாயக்கன் பேட்டை என்று அழைக்கப்படும் பகுதி, அப் பெயரால் அழைக்கப்படுவதற்கு காரணம், பெத்த நாயக் என்ற பதவி வகித்த அதிகாரி ஒருவர், அந்தப் பகுதியில் வாழ்ந்ததே யாகும். பெத்த நாயக் என்ற பதவி கிழக்கிந்தியக் கம்பெனியால் ஒப்புக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டதாகும். கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆரம்ப நாட்களிலிருந்தே, கோட்டையைச் சுற்றியுள்ள சென்னைப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரங்கள், கம்பெனியால் பெத்த நாயக் என்ற பதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. அப்பொழுது கறுப்பர் பட்டினம் என்று வழங்கப்பட்ட சிதம்பர நகர் பகுதியையும், பிற பேட்டைகளை யும் கண்காணித்துக் கொள்ளவேண்டிய பொறுப்பு பெத்த நாயக்கைச் சார்ந்ததாக இருந்தது. குற்றவாளிகளை
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/222
Appearance