221 விசாரணைக்குக் கொண்டுவந்து நிறுத்தும் உரிமைகளும் பெத்த நாயக்கிடம் விடப்பட்டிருந்தன. பெத்த நாயக் தனக்குக் கீழே தனக்கு உதவியாகப் பணிபுரிவதற்கென்று பல தலையாரிகளை நியமித்துக்கொண்டான். தலையாரிகள் 1640 ஆம் தாம் அந்தக் காலத்திய போலீஸ்காரர்கள். ய ஆண்டில் 50 தலையாரிகள் இருந்தனர் என்று தெரிய வருகிறது. குற்றவாளிகளைத் தலையாரிகளின் உதவியோடு சென்று கைது செய்வதும், அவர்களைச் சிறையில் போடுவதும், விசாரணைக்காகக் கவர்னர் முன்னிலையில் அவர்களைக் கொண்டுபோய் நிறுத்துவதும், கவர்னரால் தண்டனை கொடுக்கப்பட்ட அவர்களை மீண்டும் சிறையில் தள்ளுவதும், கவர்னரால் அபராதம் விதிக்கப்பட்டால் அந்த அபராதத் தொகையை அவர்களிடமிருந்து வசூலிப்பதும், ஆன பல்வேறு பணிகளைப் பெத்த நாயக் செய்ய வேண்டியவனாக இருந்தான்.கறுப்பர் பட்டினத்திலும், பிற பேட்டைகளிலும் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய முழுப் பொறுப்பும் அவனைச் சார்ந்ததாகும். கூச்சல் போட்டுக் குழப்பங்களையும் சண்டை சச்சரவுகளையும் வளர்ப்பவர்களைப் பிடித்துச் சிறையிலிட்டுச் சத்திர வழக்கு மன்றத்தில் (Choultry Court) அழைத்துச்செல்வதும் அவன் பணியாகும். இந்தப் பணிகளை யெல்லாம் செய்வதற்காகப் பெத்த நாயக்குக்கு, குத்தகை வரியில்லாமல் சிறிது நெல்விளையும் நன்செய் நிலங்கள் கம்பெனியால் விடப்பட்டன. மேலும் அரிசி, மீன், எண்ணெய் வித்துக்கள், வெற்றிலை பாக்கு ஆகியவற்றின்மீது சிறிதளவு துணைவரி விதித்து, அதனை வசூலித்துக் கொள்ளும் உரிமை யும் பெத்த நாயக்குக்கு வழங்கப்பட்டிருந்தது. பெத்த நாயக், முக்கியமான நேரங்களில், தலையாரிகள் புடைசூழ, மேலதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அளித்துவந்தான். 1685இல் இரண்டாம் ஜேம்ஸ் மன்னன் முடிசூட்டிக்கொண்ட போதும், 1672இல் 'மேயரின் கோட்' நிறுவப்பட்ட போதும், 1741இல் கருநாடக நவாப் தன் குடும்பத்தோடு சென்னை வந்தபோதும், பெத்த நாயக் குதிரைமீது அமர்ந்து, ஊர்வலத்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/223
Appearance