222 திற்குத் தலைமை வகித்துச் சென்றான். அப்படிப்பட்ட நேரங்களில், மற்றத் தலையாரிகள் பின்னால் அணிவகுத்துச் சென்றனர். பின்னால் கொம்புகளும் தப்பட்டைகளும் முழங்க, மேளக்கச்சேரியுடன் சதிராடுபவர்கள் நாட்டியமாடிய படி வந்தனர். பின்னால் சென்னை ஷெரீப்பு வெள்ளைத் துணி விரிக்கப்பட்ட குதிரைமீது அமர்ந்து வந்தான். நகர முக்கிய மானவர்கள் குதிரைகள் மீதும் கோச்சு வண்டிகளிலும் ஏறிவந்தனர். பாண்டு வாத்தியம் முழங்க, யானைகள் புடை சூழக் கவர்னர் அழகான கோச்சு வண்டியில் பவனி வந்தான். பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில், பெத்த நாயக் பதவியை யார் ஏற்பது என்பதில் திம்மப்ப நாயக்கருக்கும், அங்காரப்ப நாயக்கருக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டது. அங்காரப்ப நாயக்கரே அந்தப் பதவியை ஏற்கவேண்டும் என்று 1669இல் கவர்னர் முடிவாகத் தீர்ப்பளித்தார். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், பெத்த நாயக் பதவி வகிப்பவரைப் பற்றிப் புகார்கள் கிளம்பின. பெத்த நாயக் தன்னுடைய கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றுவ தில்லை என்றும், இரவு நேரங்களில் ஒழுங்கீனமாக நடப்பவர் களைக் கையும் களவுமாகப் பிடிக்கும் வகையில் தலையாரிகள் ஊர்சுற்றி வருவதில்லை என்றும், குற்றவாளிகளைக் கைது செய்வதில் போதுமான அக்கரை காட்டுவதில்லை என்றும் குற்றங்கள் சாட்டப்பட்டன. பொதுமக்களுக்கு முன்னால் மூன்று சாட்டை அடி கொடுக்கப்பட வேண்டும் என்றும், இரண்டு ஆண்டு காலத்திற்குச் சாலை போடும் பணியில் ஈடுபடுத்தப்படவேண்டும் என்றும் 'சத்திர வழக்குமன்றத் தால் தண்டிக்கப்பட்டான். கொடுமைக்குப் பேர்போன கொள்ளைக் காரன் ஒருவனைத் தப்பியோடவிட்டான் பெத்த நாயக் என்ற குற்றச்சாட்டும் அவன்மீது சுமத்தப்பட்டது. பெத்த நாயக் என்ற பதவியால் போதுமான பலன் ஏற்படவில்லை என்று அறிந்தவுடன், கம்பெனியார் கம்பெனியார் 1796 ஆம் ஆண்டு அந்தப் 1796ஆம் பதவியை அகற்றிவிட்டனர்.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/224
Appearance