223 பெத்த நாயக்குகளின் தூண்டுதலின்பேரில், பொதுமக்க ளின் சார்பாக, மீண்டும் பெத்தநாயக் என்ற பதவியாளரை நியமிக்க வேண்டும் என்று கோரும் விண்ணப்பம் ஒன்று கம்பெனியாரிடம் கொடுக்கப்பட்டது. ஒழுங்கும் பாதுகாப்பும் ஊரில் நிலவப் பெத்த நாயக் ஒருவர் கட்டாயம் இருந்தே தீர வேண்டும் என்றும், பெத்த நாயக் இல்லாவிட்டால் சொத்துக் களுக்கும் உயிர்களுக்கும் பாதுகாப்பு அறவே இல்லாமல் போய் விடும் என்றும், பெத்த நாயக்கின் சம்பளத்திற்குத் தாங்களும் ஒரு பகுதி ஈடுகட்டுகிறோம் என்னும் பொதுமக்கள் விண்ணப் பத்தின் மூலம் கேட்டுக்கொண்டனர். போலீஸ் கமிட்டி ஒன்றின் சிபாரிசின் பேரில் மீண்டும் பெத்த நாயக்கை நியமிக்க, கம்பெனியார் 1798இல் ஒப்புதல் தந்தனர். 100 தலையாரிகளுக்குக் குறையாத கண்காணிப்புப்படை ஒன்றை நிறுவிக்கொள்ளும் அதிகாரம் 'உக்கிரப்ப நாயக்' என்ற பெத்த நாயக்குக்கு அளிக்கப்பட்டது. துண்டுத்துணிகள், கச்சாப் பட்டுகள், மருந்துகள், எண்ணெய் வித்துக்கள், தேக்கு ஆகிய வற்றின்மீது வரி விதித்து, அதனை அவன் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதைத்தவிர பெரிய வீடு ஒன்றுக்கு மூன்று பணம் வீதமும், சிறிய வீடு ஒன்றுக்கு இரண்டு பணம் வீதமும் வீட்டுக் காவல் வரி விதித்து, அதனையும் அவன் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. மேற்கூறப்பட்டபடி வரி செலுத்து வோர் வீடு கொள்ளையிடப்பட்டால். அந்த வீட்டுக் காரர் பெத்த நாயக்கிடம் முறையிட்டுக் கொள்ளவேண்டும் என்றும், பெத்த நாயக் இரண்டு திங்கள்களுக்குள் கொள்ளை யிடப்பட்ட பொருள்களை மீட்டுத் தரவேண்டும் என்றும், பொருள்களைத் திரும்பப்பெறாத நிலையில் வீட்டுக்குரியோர் கவர்னரிடமாவது அல்லது அமைதியை நிலவச்செய்யும் நீதிபதி களிடமாவது விண்ணப்பித்துக்கொண்டால், அந்தப் பொருள் களுக்குள்ள விலைமதிப்பை வீட்டுக்குரியோரிடம் கொடுக்கும் படி பெத்த நாயக் வற்புறுத்தப்படுவார் என்றும் விதிகள் விதிக்கப்பட்டன.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/225
Appearance