224 பெத்த நாயக் பதவி மீண்டும் 1806ஆம் ஆண்டுவரையும் நீடித்து வந்தது. 1806ஆம் ஆண்டில் பெத்த நாயக் என்ற பெயரும், தலையாரிகள் என்ற பெயரும் அகற்றப்பட்டு முறையே கமிஷனர் என்றும், போலீஸ்காரர்கள் என்றும் பெயர்கள் இடப்பட்டன. இந்தப் போலீஸ் இலாகா கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடி நிர்வாகத்தின்கீழ்க் கொண்டு வரப்பட்டது. 1858ஆம் ஆண்டில், இந்தப் போலீஸ் இலாகா மேலும் சீர்திருத்தம் செய்யப்பட்டுச் சென்னை மாகாணத்திலுள்ள முக்கியமான நகரங்களிலெல்லாம் நிலை நாட்டப்பட்டன. . இந்தப்படியாகச் சென்னையிலுள்ள போலீஸ் கமிஷனர் பதவி, நடைமுறைக்கு நாளடைவில் வந்துசேர்ந்தது. இப்பொழுதும், சென்னைப் போலீஸ் கமிஷ்னர், மற்ற மாவட்டங்களிலுள்ள தலைமைப் போலீஸ் அதிகாரிகளைக் காட்டிலும், மிகவான தனி அதிகாரங்களைப் பெற்றுத்தான் ஆணை செலுத்திவருகிறார். மதராஸ் பட்டினம் பெத்த நாயக்கின் வழி வழிவந்த பதவியே போலீஸ் கமிஷனர் பதவி யாகும் என்பதை, அத்தகைய தனி அதிகாரங்களும், சலுகை களும், இன்றும் அறிவித்துக் கொண்டிருக்கின்றன.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/226
Appearance