28. டாக்டர் ஆனந்த குமாரசாமி பாஸ்டன் நுண்கலைப் பொருட்காட்சிச்சாலையில் இந்தியப் பகுதிக்கு 1917 முதல் 1947இல் - தாம் இருக்கும் வரை தலைவராக இருந்தவர் டாக்டர் ஆனந்த குமாரசாமி. இந்திய மறுமலர்ச்சிக்கு மட்டுமல்ல, உலகத்தில் ஒரு புதிய மறுமலர்ச்சிக்கும் காரணமாய் இருந்தவர்களுள் முதன்மையான இடத்துக்குரியவர் அவர் என்று டாக்டர் எஸ். ராதாகிருட் டினன் கூறியுள்ளார். உலகத்தின் எந்தப் பகுதியிலும் ஒரே கட்டிடத்தில் இல்லாத, மிகவும் பூரணமான இந்தியக் கலைத் தொகுப்பு பாஸ்டன் பொருட்காட்சிச் சாலையில் உள்ளது. இந்தியக் கலையை மேற்கு நாடுகளுக்கு விரித்துரைக்க, விசேடத் தகுதி வாய்ந்த உலகம் அறிந்த அறிஞர், டாக்டர் குமாரசாமியே இந்தச் சிறப்புக்குக் காரணம் ஆவார். ஆரம்பத்தில் பூகர்ப்ப சாஸ்திரத்திலும் தாதுப்பொருட் கலையிலும் தனி ஆர்வம் கொண்டிருந்தவர் அவர். அவர் இங்கிலாந்தில் வளர்ந்தவர்; பழக்க வழக்கங்களும் பண்பும் அமையும் தமது வாழ்க்கைப்பருவத்தில் இங்கிலாந்தில் கல்வி பயின்றவர். அவர் தாம் தமது வாழ்க்கைப் பணியாற்றிய நாட்டைத் தமது இருபத்தொன்பதாவது வயதுவரை பார்க்க வில்லை. இத்தகையோரான டாக்டர் குமாரசாமி இந்தியக் கலாசாரத்தில் பேரார்வம் கொண்டவரானார்; இந்தியத் தேசியக் கலையின் மாண்பை அறிந்துகொள்ளும் சரியான நுண்ணுணர்வை அவர் விருத்தி செய்தார்.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/227
Appearance