226 அவர் தந்தையார் இந்து; தாயார் பிரிட்டிஷ் பெண்மணி. அவர்கொழும்புக்கு அருகே 1877, ஆகஸ்டு 22ஆம் தேதி பிற தார். அவருடைய அன்னையாரே அவரை வளர்த்தார். அவர் விக்ளிப் கல்லூரியிலும், பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்தில் பூகர்ப்ப சாஸ்திரத்திலும் சிறந்த முறையில் பி.எஸ்ஸி. பட்டம் பெற்றார். 1904இல் இலங்கைத் தாதுப்பொருள் சர்வேக்கு டைரக்டராக நியமனம் பெற்றார். மூன்றாண்டு களுக்குப்பின் இலங்கை பூகர்ப்ப ஆராய்ச்சித் துறையில் லண்டனில் டி.எஸ்ஸி. பட்டம் பெற்றார். . 1906ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் அவர் செய்த முதற் சுற்றுப்பிரயாணத்தில் இந்தியகலை, இலக்கியம் ஆகிய வற்றில் அதிக ஆர்வம் கொள்வாராயினார். 1910இல் வட இந்தியாவில் அவர் அதிகமாகப் பிரயாணம் செய்து, இந்திய வண்ணச் சித்திரங்களுக்கும் ஓவியங்களுக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளவற்றைத் தொகுத்தார். அது சிறந்த தொகுப்பு. கல்கத்தாவில் இருந்தபோது, அவர் இந்தியக் கலையைப் பற்றிச் சிறத்த விரிவுரை செய்தார். அவரது பேச்சுத் திறமை யும் கல்வியும் இந்தியர் கலைத்துறையில் தங்கள் நாட்டின் பெரிய வெற்றிகளைக் காணுமாறு செய்தன. காசியில் தமது தொகுப்பை வைக்கத் தகுதியான ஒரு பொருட்காட்சிச்சாலை கட்டினால், தாம்பெற்ற மதித்தற்கரிய கலைச்செல்வங்களை நன்கொடையாகக் கொடுப்பதாக அவர் சொன்னார். அவ்வாறு செய்யாததால், பாஸ்டனிலுள்ள நுண்கலைப்பொருட்காட்சிச் சாலையில் அவரது தொகுப்புகள் வைக்கப்பட்டன. அதன் தர்மகர்த்தாக்கள் தங்கள் பொருட் காட்சிச்சாலையில் இந்தியக்கலை ஆராய்ச்சிக்கு ஒரு புதிய பிரிவை அமைத்ததுமல்லாமல், அவரை அப்பகுதியை மேற் பார்ப்போராகவும் நியமித்தார்கள்.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/228
Appearance