227 . அவரது வாழ்க்கையின் மீதியுள்ள முப்பதாண்டுகளில் பாஸ்டனே அவரது சொந்த ஊராயிற்று. அதுமுதல் பொருட் காட்சிச்சாலைத் தொகுப்பைப்பற்றி அவர் ஆராய்ச்சி செய்வாராயினார். 1922இல் அவர் இந்தியக்கலை, மகமதியக் கலை ஆகியவற்றின் மேற்பார்வையாளரானார். 1933இல் இந்திய, பாரசீக, மகமதியக் கலைகளின் புலவராக ஆக்கப் பட்டார். இந்தியக் கலை பற்றி ஆறு காண்டங்கள் கொண்ட பெரிய ஜாபிதா ஒன்று அவர் தயாரித்தார். இந்தியக் கலையின் பொருட்காட்சிச்சாலைத் தொகுப்பில் இல்லாத வற்றைச் சேர்ப்பதற்கு அவர் அயராது உழைத்தார். இந்தியக் கலாசாரம் பற்றிய அறிவை நியூயார்க்கில் பரப்பு வதற்கும், இரண்டு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை வளர்ப்பதற்கும், நியூயார்க்கில் 1924இல் டாக்டர் குமாரசாமி இந்தியக் கலாசார நிலையத்தை தோற்றுவித்தார். அமெரிக் காவில் கொலம்பியாப் பல்கலைக் கழகத்திலும், டென்வரிலும், மற்றும் இடங்களிலும், இந்தியக் கலை, இந்தோனேஷியக் கலை, கீழக்கோடிக் கலை ஆகியவைபற்றியும் அவர் பல விரிவுரைகள் செய்தார்.1938இல் வாஷிங்டனிலுள்ள இந்திய சுதந்திர தேசீயக் கமிட்டிக்கு அவர் தலைவரானார். அவர் தமது மரணத்துக்கு இரண்டு வருஷங்களுக்குமுன் அமெரிக்கத் தலைநகரில் மேற்படிப்புப் பற்றிய உலகக் கவுன்சிலை நிறுவக் காரணமாயிருந்தார். ல அவர் எழுதிய மிகப்பல நூல்களைப்பற்றி வாஷிங்டனைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்டு எட்டிங்சன் கூறியவற்றை எடுத்து உரைப்பது பொருத்தமாகும். "டாக்டர் ஆனந்த குமாரசாமி எழுதியவற்றைவிட மிகுதி யான விஷயங்கள்பற்றி நூல்கள் எழுதி வெறியிட்ட அறிஞர் கள் உலகில் மிகச்சிலரே ஆவார்கள். தத்துவம், உண்மை இயல், மதம், சித்திர சிற்பக் கலை, இந்திய இலக்கியம் இஸ்லாமியக் கலை, மத்தியகாலத்துக் கலை, சங்கீதம், பூகர்ப்ப சாஸ்திரம் ஆகியவற்றைப் பற்றியும், விசேஷமாக சமூகத்தில்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/229
Appearance