21 வினா எழும்பும்போது, ஒரு விளக்கத்தின் மூலம் முழு உண்மையும் புலப்படும் என்று கருதுகிறேன். இந்தக் கலைகள் உள்ளபடியே வடமொழிக்கு உரிமை யுடையனவாக இருந்திருக்குமேயானால், இந்தியா முழுவதும் எங்கெங்கு வடமொழி வேரூன்றியிருந்ததோ, அங்கெல்லாம், குறிப்பாக வடமொழி பிறந்து வளர்ந்த க வடபுலத்தில், கருநாடக இசையும்!'-'பரத நாட்டியமும் - கருங்கற் சிற்பங்களும் - 'வளர்ந்தோங்கிய கோபுரங்களும்' நிலை பெற்றிருக்க வேண்டுமே! அங்கெல்லாம் இத்தகைய சீரிய கலைகள் தோன்றவும் இல்லை, வளரவும் இல்லை, வாழவும் இல்லை என்பதிலிருந்தே, இந்தச் சீரிய கலைகளெல்லாம் தமிழிகத்திற்குத்தான் உரிமை வாய்ந்தவை என்பது முக்காலும் உண்மை! உண்மை!! உண்மையே!!! என்பது தெளிவுபடும். இந்தக் கலைகளைப் பொறுத்துப் பயன்படுத்திவருகின்ற சொற்களிலே எவை எவை வடமொழிச் சொற்களாகப் புகுத்தப் பட்டிருக்கின்றனவோ, அவற்றிற்கு நேரான உண்மையான - பழந்தமிழ்த் தனிச்சொற்களைக் கண்டறிந்து தமிழுலகத்திற்கு அறிவிக்க வேண்டியது, அந்தந்தத் துறை களில் ஈடுபாடு கொண்டுள்ள நல்ல தமிழ் அறிஞர்களின் நீங்காக் கடமையாகும். சித்த மருத்துவக் கலை தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்பே தோன்றி, இயற்கையோடு இயைந்து, இயல்பாகப் படிப்படியாக வளர்ந்து, தமிழகத் தட்ப- வெப்ப- உணவு - நீர்ப்பாங்கு-நிலப்பாங்கு ஆகியவற்றிற்கு ஏற்ப அமைந்த மருத்துவ முறையாகும். இந்த மருத்துவக் கலை, முறையாகவும் சிறப்பாகவும் கண்காணிக்கப்பட்டு வளர்க்கப் பட்டு வந்தால், தமிழர்க்கு எளிய - மலிவான - உயர்ந்த - உறுதியான - நிலையான மருத்துவ உதவி கிடைக்க வழி பிறக்கும். சித்த மருத்துவர்கள் முயற்சி எடுப்பார்களாக! வழி காட்டுவார்களாக? தமிழக அரசு துணை நிற்பதாக!
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/23
Appearance