உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. நாதசுர இசைப்பெரும் புலவர் இராசரத்தினம் திராவிடத்தின் இசைப்பெரும் புலவரான டி. என். இராச ரத்தினம் அவர்களும், திராவிடத்தின் அரசியல் பேரறிஞர் அண்ணா அவர்களும், ஓரிடத்தில் அமர்ந்திருக்கும் காட்சியே இவ்விதழ் (மன்றம் 15-2-56) அட்டைப் படமாக விளங்குகிறது. . 25-1-56 ஆம் நாளன்று, தோழர் எசு. எசு. பி. இலிங்கம் (வேதாச்சலம்) அவர்களின் திருமகளார் மணிமேலை,அழகு ராணி ஆகியோர்க்கு எழுத்தறிவிக்கும் விழா நடைபெற்ற போது, அறிஞர் அண்ணா அவர்களும், இசைப் பெரும்புலவர் இராசரத்தினம் அவர்களும், பக்கத்துப் பக்கத்தே அமர்ந் திருந்து உரையாடி மகிழ்ந்திருந்தனர். அறிஞர் அண்ணா அவர்கள், தோழர் இராசரத்தினம் அவர்களைப் பாராட்டிப் பேசும்போது, அன்று குறிப்பிட்டபடி, தமிழகத்தின் பறிபோகாச் செல்வமான நாதசுர இசையைப் பண்போடும், புகழோடும், பூரிப்போடும் காப்பாற்றிவரும் பெருமை அனைத்தும் திருவாவடுதுறை நாதசுர இசைப் பெரும்புலவர் இராசரத்தினம் அவர்களையே சாரும். நாதசுர எவ்வளவோ பேர்கள் இசையில் தேர்ச்சிபெற உலகில் முயன்று பார்க்கிறார்கள். எவராலும் முடியவில்லை. எல்லாத் துறையிலும் ஆதிக்கம் செலுத்த முயன்று, அந்தந்தத் துறையில் ஓரளவுக்கு வெற்றிகூடப் பெறமுடிந்த ஆரியப் பார்ப்பனர். இந்த ஒரு துறையில்தான் புகமுடியாமலும் வெற்றி பெறமுடியாமலும் திகைக்கிறார்கள். அவ்வளவு அருமையான நாதசுர இசைக்கலையை மிகச் செழிப்பாகப்