230 போற்றி வளர்க்கும் பண்பு, தோழர் இராசரத்தினம் அவர் களிடம் செறிந்து கிடப்பது எல்லோராலும் பாராட்டத்தக்க தொன்றாகும். "தோழர் இராசரத்தினம் அவர்களின் நாதசுரத்திலிருந்து எழும்பும் கவர்ச்சிகரமான - இனிய - கம்பீரமான ஓசை வேறு எவருடைய நாதசுரத்திலும் எழும்பவில்லை என்று கூறினால் அது மிகையாகாது. வேறு யாரும் எட்டிப் பிடிக்கமுடியாத ஒரு தனிநிலையைத் தமக்கென்று அவர் ஏற்படுத்திக் கொண்டு, அதில் எக்களிப்போடு உலாவிவருகிறார்." அறிஞர் அண்ணா அவர்கள் சுட்டிக்காட்டியதைப்போல் அவரது நாதசுரத்தில் குழலின் ஒலி, வீணையின் ஒலி, மகுடியின் ஒலி, பிடிலின் ஒலி முதலிய எல்லாவகை ஒலிகளையும் அப்பழுக்கற்ற முறையில் அப்படியே கேட்டு இன்புறலாம். அவ்வளவு உயர்ந்த இசைப்புலமை அவரிடம் அமைந்திருக் கிறது. இந்திய அரசியலார், அவரது அருமை பெருமைகளை உள்ளது உள்ளவாறு அறிந்த காரணத்தால்தான், அவருக்குப் பட்டம் வழங்கி, அவரைப் பெருமைப்படுத்தி, இந்த ஒருவகை யில் பழிதேடிக் கொள்ளாமலிருக்கிறார்கள். நாதசுரத்தின் அமைப்பையும், தோற்றத்தையும் புதுக்கிய பெருமைகூடத் தோழர் இராசரத்தினம் அவர்களைச் சாரும் என்று இசைவல்லுநர்கள் கூறுகிறார்கள். இசைப்பாட்டுப் பாடும் திறனும் தோழர் இராசரத்தினம் அவர்களுக்கு உண்டு. அவரது நாதசுரத்தில் புகும் ஒலி, அவரது சிறந்த இசைப்பாட்டு ஒலியாகவே நுழையும் காரணத்தால் தான், அவரது நாதசுர இசை தனித்தன்மை பூண்டதாக இலங்குகிறதோ என்றுகூட எண்ணத் தோன்று கிறது. சென்னைக் கடற்கரையில், மாபெருங்கூட்டம் கூட்டி, அவரது நாதசுர இசையை ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/232
Appearance