30. தன்மதிப்பு இயக்கத் தூதுவர் தன்மதிப்பு (சுயமரியாதை) இயக்கம் தமிழகத்திலே வலுப்பெற்று வளர்வதற்கு, மூலகாரணமாக இருந்த விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரிலே தோழர் கைவல்யம் குறிப்பிடத்தகுந்த ஒருவராவார். தன்மதிப்பு இயக்கத்தின் துவக்கக் காலத்தில் கடவுள்கள், மதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், சாத்திரங்கள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றில் பொதிந்துகிடக்கும் குருட்டு நம்பிக்கைகளையும் மூடப்பழக்கங்களையும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் அலசிக்காட்டி, இயக்கத்தை எதிர்த்து வெகுண்டெழுந்து நின்ற மதவாதிகள், புராணிகர்கள், புரோகிதர்கள், பண்டிதர்கள் ஆகியவர்களெல்லாம் வாயடைத்துப் போய்ப் புறமுதுகிட்டு ஓடும்படி செய்த பெருமையெல்லாம், தோழர் கைவல்யம் அவர்களையே சாரும். தோழர் கைவல்யம் அவர்கள் மேடை ஏறிப் பேசும் ஆற்றல் உடையவர் அல்லர்; அவர் மேடை ஏறிப் பேசிய தில்லை எனலாம். ஆனால், சிலரை முன்னால் உட்கார வைத்துக்கொண்டு, மணிக்கணக்கில், நாட்கணக்கில் உரை யாடல் நிகழ்த்துவதிலும், விவாதம் புரிவதிலும் மிக வல்லவர். அவர் இலக்கியங்களை மிகவாகப் படித்துத் தேர்ந்த புலமை மிக்கவரல்லர். எனினும், தேவையான அளவுக்கு இதிகாசப் புராணங்களையும் சாத்திரங்களையும் அலசிப்பார்த்தவர். அவர் தம் பரந்த அனுபவ அறிவைக் கொண்டுதான் வாதாடு
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/234
Appearance