உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார். 233 எதிரிகளை முன்னே வைத்துக்கொண்டு, வாதாடும் போது அவரது கண்களிலே கனலும், சொற்களிலே காரமும் தெறிக்கும். வாதத்தில் அவரை வென்று திரும்பியவர்கள் யாரும் இல்லை. அவரது எழுத்து, பண்டிதரும் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் நனி எளிமையதாக இருக்கும். ஆரம்பக் காலத்தில் "குடிஅரசு' இதழில் அவர் எழுதிய கட்டுரைகள், அவ்விதழுக்குத் தனிப்பொலிவையும், பெருமை யையும் தேடித்தந்தன. அவரது கட்டுரைகளைப் படித்துப் பகுத்தறிவு இயக்கத்தினராக மாறியவர்கள் ஏராளமானவர் கள் ஆவார்கள். பரந்த அனுபவம், ஆழ்ந்த சிந்தனை, வாதிடும் திறன், முரட்டு இயல்பு, பிடிவாதப் போக்கு, கொள்கைப்பற்று ஆகியவைகள் அவரிடம் சிறந்து காணப் பட்டன. ஒருபோது அவர், ஏனம்பள்ளி ஜமீன்தார் வீட்டுத் திருமணத்திற்குச் சென்றிருந்தாராம். சாப்பாட்டுப் பந்தியில், பரிமாறின பார்ப்பனன் ஒருவனைக் குடிக்கத் தண்ணீர் கேட்டபோது, அவன் பந்தியில் வைக்கப்பட்டிருந்த தம்ளரை எடுத்தானாம். உடனே பக்கத்திலிருந்த மற்றொரு பார்ப்பனச் சமையல்காரன், இந்தப் பார்ப்பனனைப் பார்த்து, "என்னடா மடையா! சூத்திரன் குடித்த தம்ளரைக் கையால் தொட்டு விட்டாய்?" என்று சினந்துகொண்டானாம். உடனே தோழர் கைவல்யம், சாப்பிட்டுக்கொண்டிருந்தவர் எழுந்து, எச்சில் கையாலேயே அந்தப் பார்ப்பனனை ஒரு அறை செவுளில் அறைந்து, "யாரடா சூத்திரன்?” என்று கேட்டாராம். அங்கு இருந்தோர் அனைவரும் திகைத்துப் போயினராம். அந்தப் பார்ப்பனன் தன் கூற்றுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்ட தற்குப் பிறகே தோழர் கைவல்யம் மீண்டும் பந்தியில் அமர்ந் தாராம். இப்படிப் பலப்பல நிகழ்ச்சிகள் அவரது வாழ்நாளில் ஏற்பட்டிருக்கின்றன. ா அவர் சிறுவயதிலே வீட்டைவிட்டு வெளியேறிச் சாமியார் கோலம் பூண்டு, இந்தியா முழுவதும் ஊர்ஊராகச் சுற்றி யலைந்து திரிந்து அனுபவம் பெற்றவர். சாமியார் கோலத் அ.-15