உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 தோடு வாழ்கையை நேரிய வழியில் ஈடேற்ற வசதியாக இருக்கும் பொருட்டுச் சித்த மருத்துவத் தொழிலை மேற் கொண்டு, அதில் பெரும் பெயர்பெற்று விளங்கினவர். சித்தர்களுடைய அறிவுரைகள் அவருடைய சிந்தையைப் பெரிதும் கிளறி, அவரைப் பகுத்தறிவு வாதியாக ஆக்கின. அவருடைய நோக்கத்திற்கேற்பத் தன்மதிப்பு இயக்கம் தோன்றவே, தீவிரமாக ஈடுபட்டுத் தன்மதிப்பு இயக்கத்தின் சிறந்த தூதுவராக நின்று, நாட்டில் அரும் பணியாற்றி வந்தார்.