31. இன்னா செய்வார்க்கும் இனியவே செயல்! பகுத்தறிவு இயக்கக் கருத்துக்களைத் துணிவோடும். தெளிவோடும்,அழகாகவும்,கவர்ச்சிகரமாகவும், சொல்நயம் பொருள்நயம் சிறக்கக் கவிதைகள் மூலம் எடுத்தியம்பிவந்த புரட்சிக்கவிஞர் அவர்கள், இயக்கத்தில் தமிழார்வங் கொண்ட ஒருசிலருக்கு மட்டுமே அறிமுகமான ஒருவராக ஆரம்பக் காலத்தில் இருந்துவந்தார்கள். "பாரதிதாசன் கவிதைகள்' என்ற நூல் வெளிவந்த பிறகு, பிறகு, தமிழ் கற்றறிந்த புலவர்களில் ஒருசிலரும் புரட்சிக் கவிஞரின் கவிதைச் சிறப்பை அறிந்துகொள்ள லானார்கள். புரட்சிக் கவிஞரின் கவிதைகளிலே உள்ள கருத்துநயங்களை, அறிஞர் அண்ணா அவர்கள் பேச்சிலும், எழுத்திலும் மேற்கோள் களாக ஆங்காங்குச் சுட்டிக்காட்டத் தொடங்கியபிறகு, லைமறை காயாக இருந்த புரட்சிக்கவிஞரின் கவிதைகளின் அருமை பெருமைகளைப் பாமரமக்களும் பொதுமக்களும் பெருவாரியாக அறிந்துகொள்ளத் தலைப்பட்டனர். புரட்சிக் கவிஞர்' என்ற சிறப்புக்குரிய அடைமொழி, அறிஞர் அண்ணா அவர்களாலேயே வழக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டது ஆகும். 1944-45 ஆம் ஆண்டு வாக்கில் தமிழ்ப் பேராசிரியர் பொறுப்பினின்றும் இளைப்பாறிய புரட்சிக் கவிஞரின் வாழ்வு, வறுமையாலும், பொருளாதார நெருக்கடியாலும் தொல்லையுறாது, கவலைக்கிடமின்றிச் செவ்வனே இனிமை யாகச் செல்லவேண்டும் என்று, பகுத்தறிவு இயக்கத்தினர்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/237
Appearance