உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 கருதினர். அப்படி அவரது வாழ்வு செவ்வனே இனிமை யாகச் சென்றால், அவரது கவிதையுள்ளம் கவிதையூற்றுக் களைத் தங்குதடையின்றிப் பெய்து கொண்டிருக்கும் என்று எதிர்பார்த்தனர். பெரும்பாலான இயக்க நண்பர்களின் விருப்பத்தை நிறைவேற்றிவைக்கும் பணியினைச் செய்து முடிக்கும் முயற்சியில், தோழர்கள் திருவாரூர் டி. என். இராமன், சலகண்டபுரம் ப. கண்ணன், நாமக்கல் கிருட்டினராசு. நாமக்கல் செல்லப்பா முதலியோர் ஈடுபட்டனர். புரட்சிக் கவிஞர் அவர்களுக்குப் பொன்முடிப்பு ஒன்று திரட்டி அளிப்பது என்ற முடிவுக்கு வந்தனர். அப்படி நிதி ஒன்று திரட்டித் தருவதற்குச் சார்பாய், 1945இல் திருச்சியில் நடைபெற்ற திராவிடக்கழக மாநில மாநாட்டில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. பிறகு பல திங்கள் கழித்தும் சுமார் இரண்டாயிரம் ரூபாய்தான் நண்பர்களால் சேர்க்க முடிந்தது. நிதியை விரைவாகவும், மிகவாகவும் திரட்டிட வேண்டுமானால், அறிஞர் அண்ணா அவர் களின் ஒத்துழைப்பையும் பெற்று, அவர் முலமாகவே திரட்டுவது சாலச்சிறந்த வழியாகும் என்ற முடிவுக்கு நண்பர்கள் வந்தார்கள். பின்னர் அண்ணா அவர்களிடம் தம் விருப்பத்தைத் தெரிவித்துக் கொண்டனர். அண்ணா அவர்களும் தம் முழு ஒத்துழைப்பையும் தருவதாக வாக்களித்து, நிதி திரட்டும் பொறுப்பைத் தாமே ஏற்றுக் கொண்டார்கள். "திராவிட நாடு' இதழ்மூலம் அறிஞர் அண்ணா அவர்கள் பாரதிதாசன் நிதிக்குப் பெருந்தொகை அளிக்குமாறு செந்தமிழ் நாட்டினரிடம் வேண்டுகோள் அறிக்கையை வெளியிட்டார். அதைக் கண்டதும், தமிழகம் எங்கணும் உள்ள தமிழ் அன்பர்களும், கடல் கடந்த நாடு களிலுள்ள தமிழ் அன்பர்களும், அஞ்சல் மூலமும், நேரிடை யாகவும் நிதித்தொகைகளை விடுவிடு என்று அனுப்பிவைத் தார்கள். அண்ணா அவர்கள் எதிர்பார்த்த காலத்திற்குள் ளேயே, சுமார் ரூபாய் இருபத்திநான்கு ஆயிரத்துக்குமேல் சேரும் நிலை ஏற்பட்டது.