237 சென்னை சிதம்பரம் நகரிலுள்ள பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளி விளையாட்டு வெளியில், மாபெரும் நிதியளிப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். குழிக்கரை பிச்சையப்பா அவர்கள் நாயன இசைவழங்க, இசையரசு தண்டபாணி அவர்கள் இன்னிசைப் பாட்டுக்கள் பாட, நாவலர் ச. சோமசுந்தரபாரதியார் தலைமைதாங்க, தோழர் ஏ.கே.தங்கவேலர் அவர்கள் புரட்சிக் கவிஞருக்குப் பொன்னாடை போர்த்த, அறிஞர் அண்ணா அவர்கள் புரட்சிக் கவிஞருக்குப் பொற்கிழி கொடுக்கப், பல தமிழ்ப் பேரறிஞர்கள் பாராட்டுரைகள் வழங்க, விழா மிகச் சிறப் பாகவும், வெற்றிகரமாகவும் நடந்தேறியது. அந்த விழாவின் பொலிவு அத்துணையும் அறிஞர் அண்ணா அவர்கள் முயற்சி யின் வலிவு என்பதை, விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த இலட்சக்கணக்கான மக்களும் கண்டு மகிழ்ந்தனர். மறுநாள் நிதியளிப்பு நிகழ்ச்சியை நிழற்படமாக எடுக்க வேண்டி, சென்னை தாசன் நிழற்படச் சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அறிஞர் அண்ணா அவர்கள் நிதி முடிப்பைக் கொடுப்பது போலவும், புரட்சிக் கவிஞர் அவர்கள் நிதி முடிப்பை வாங்கிக்கொள்வது போலவும் நிழற்படம் எடுப்பதாக நிறுத்தப்பட்டார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் தன்னடக்க உணர்ச்சியோடு, நிதி முடிப்பை ஏந்தி நிற்பதுபோல் நின்றுகொண்டு, அந்த முடிப்பை எடுத்துக் கொள்வதுபோல் காட்சியளிக்குமாறு கவிஞரைக் கேட்டார்கள். புரட்சிக் கவிஞர் அவர்கள் "கொடுப்பவன் கைதான் உயர்ந்திருக்கவேண்டும்; வாங்கிக் கொள்பவன் கைதான் தாழ்ந்திருக்க வேண்டும்!" என்று கூறி, அவ்வாறே கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். அந்த நிலையிலேயே நிழற்படம் எடுக்கப்பட்டது. அப்படி எடுக்கப்பட்ட படம், "திராவிட நாடு" போன்ற பல இதழ் களிலும் வெளியிடப் பெற்றது. புரட்சிக் கவிஞர் அவர்களுக்கு அறிஞர் அண்ணா அவர்கள் பெருமுயற்சி எடுத்துப் பெருந்தொகையினை
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/239
Appearance