உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 உலக நாடுகளிலேயே அறுசுவை உண்டியைப் பண்படுத்தி, பக்குவப்படுத்தி, பதப்படுத்தி, எளிமையாக, மலிவாக, ஊட்டச் சத்தோடு கூடிய சுவையான, மணமிக்க உணவாகத் தருவது, தமிழகம் தொன்றுதொட்டுப் போற்றி வளர்த்துவரும் சமையற்கலை யேயாகும். இந்தச் சமையற் கலையின் அருமை பெருமைகளை அறிந்து, அதனைப் போற்றிக் காப்பாற்றி வளர்த்துவருவோமாக! "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்பது பாரதியார் வாக்கு. "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு/" என்பது புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் ஆணை. வாழ்க தமிழ்! வளர்க அழகுக் கலைகள்! வெல்க தமிழர்!