இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
238 நிதியாக அளித்த இந்தச் சிறப்புக்குரிய வரலாற்றைத் தமிழகம் என்றென்றும் மறக்க வழியில்லை என்பது உறுதி. புரட்சிக் கவிஞருக்கு நிதி திரட்டித் தரும் சீரிய பணியில் ஈடுபட்டதற்காக, அறிஞர் அண்ணா அவர்கள், பெரியார் இராமசாமி அவர்களின் பெரும் பகையையும், வெறுப்பையும், கடுஞ்சொல்லையும் தாங்கிக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆட்படுத்தப்பட்டார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் எதையும் தாங்கும் இதயத்தோடு, கடமையை ஆற்றுவதில் கண்ணுங் கருத்துமாக இருந்து, கண்ணியத்தைக் கடைப் பிடித்தார்கள்.