32. தினகரன் 'ஓ' என்ற பேரிரைச்சலுடன் பங்களூர் பாசஞ்சர் ஜோலார்பேட்டை பிளாட்பாரத்தை விட்டு நகர்ந்தது. பெரிய சந்தைக் கடையிலிருந்து திடீரென அமைதியான இடத்திற்கு வந்ததைப் போன்றிருந்தது. ரயில் ஓட ஆரம்பித்ததும் சில்லென்று குளிர்ந்த காற்றுப் பட்டது. இதுவரை புழுக்கமாக இருந்தது சற்று அடங்கியது. செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருந்த நான், அதை மடித்துக் கையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன். நான் இருந்த மூன்றாம் வகுப்பு வண்டியில், பகல் நேர மாதலால் கூட்டம் அதிகமில்லை. என்னைத் தவிர ஐந்தாறு பேர்கள்தான் இருந்தார்கள். கதவின் ஓரத்தில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். என் தலையை வெளியே நீட்டினேன். எங்கோ பார்த்தது போலிருந்தது. சட்டென்று புரியவில்லை. மறுபடியும் அவரை உற்றுக் கவனித்தேன். சிறிது நேரம் யோசித்த பிறகு அவர் தினகரன் என்பது நினைவிற்கு வந்தது. அதைத் தொடர்ந்து, பத்து ஆண்டுகளாக அவரைப் பற்றி உலவிவரும் வதந்திகளும் நினைவிற்கு வந்தன. . தினகரன் பட்டினத்தில் பத்துப் பதினைந்து ஆண்டு களுக்குமுன் நாங்கள் வசித்த தெருவில் வசித்துவந்தார். அப்பொழுது அவர் "உலகம் அவர் "உலகம்" என்னும் பத்திரிகையில் கதைகள் கட்டுரைகள் எழுதிவந்தார். ஒரு பாங்கியில் வேலை பார்த்து வந்தார். அஃதன்றி, அவருக்கு ஓரளவு சொத்தும் வீடும் இருந்தது. ஒருநாள் திடீரென்று அவர்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/241
Appearance