உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 எங்கோ சென்றுவிட்டதாகத் தெரிந்தது. சில நாட்களுக்குப் பிறகு, 'அவர் தனது வீட்டையும் நிலத்தையும் விற்று விட்டார்' என்றும் சொன்னார்கள். அவர் எங்கே சென்றார்? என்ன செய்கிறார்? என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அவரைப்பற்றி ஊரில் பலவிதமாகச் சொன்னார் கள். அவர் மலேயா சென்று, அங்கே எஸ்டேட்டுகள் வாங்கி, அங்கேயே தங்கிவிட்டதாக ஒருவர் சொன்னார். "அதெல்லாம் தவறு. அவர் பணக்காரர்தான், அதனால் அவர் அங்கே போய் அதை வாங்கினார். இங்கே போய் இதை வாங்கினார் என்று சொல்வது தவறு. அவர் தெற்கே எங்கோ தன் சொந்தக் கிராமத்திற்குச் சென்று கிராமப்புனருத்தாரண சேவையில் இருப்பதாகக் கேள்வி' என்றார், அவரோடு வேலை செய்த பாங்கர் பராங்குசம். "ஷேர் மார்க்கட்டில் அவர் பெரிய பேர்வழி சார். அவரைக் கம்பீட் பண்ண எவராலும் முடியாது. அவர் இப்பொழுது பம்பாயில் பெரிய ஆளாக இருக்கிறார்" என்று எதிர் வீட்டு எல்லப்பன் கூறினார். " "அவர் வடக்கே ஆசிரமத்தில் சேவை செய்வதாக ஒரு சாமியார் மூலம் நான் அறிந்தேன்" என்று உப்பு மண்டி குப்புசாமி சொன்னார். இவற்றில் யார் சொல்லுவது உண்மையென்று விளங்காமலிருந்தது. இதுபோன்று தினகரைப் பற்றிய வதந்திகள் இந்தப் பத்து வருடங்களாக உலவிக் கொண்டிருந்தன. அப்படியிருக்க, நான் திடீரென்று அவரை ரயிலில் சந்தித்தது ஆச்சரியமாக இருந்தது. பல ரயில் இரண்டு ஸ்டேஷனைத் தாண்டிவிட்டது. இதுவரை கதவருகில் நின்றிருந்தவர் என் எதிரே வந்து உட்கார்ந்தார். நான் அவரை உற்றுக் கவனித்தேன். எதையும் ஆழ்ந்து