241 நோக்கும் கண்கள், சிகப்பான நிறம், மீசை வெளுத் திருந்தது. முகத்தில் கவலையின் ரேகைகள் படர்ந்திருந்தன. நான் உற்று நோக்குவதைக் கவனித்துவிட்டு, என்னைப் பார்த்தார். அவர் என்னை அடையாளம் கண்டு கொண்டார். என்னையும் என் குடும்பத்தாரையும் விசாரித்தார். அவரைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டு மென்று எனக்கு ஆவலாக இருந்தது. "நீங்கள் இப்பொழுது சென்னையில்தான் இருக்கிறீர் களா?" என்றேன். ஊம்..." என்றார். பின் சிறிதுநேரம் மௌனமாக இருந்துவிட்டு, "நான் ஒரு புத்தகத்தில் படித் தேன் வயோதிகப் பருவத்தில் அன்புகொள்ளல் உணவுக்குச் சமம் என்று. ஆனால் நான் சாரு! சாரு!...ஆம். நிலத் திலும் நீரிலும் வாழும் பிராணிகள்கூட ஒன்றை ஒன்று நேசிக்கின்றன. ஆனால் நாம் மட்டும்..." என்று கூறி ஆகாயத்தை வெறித்து நோக்கினார். எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஏன் அப்படிக் கூறுகிறீர்கள் என்றேன். "ஆம் தம்பி, இது உண்மை. என் அனுபவத்தி லிருந்து கூறுகிறேன் கேள். அமைதிதேட என்று என்னிட மிருந்த பொன்னையும் பொருளையும் அறியாமையால் அழித்த வரலாற்றை உனக்குக் கூறுகிறேன்' என்று அவர் சொல்லலானார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, 'உலகம்' பத்திரி கையில் எழுத்தாளானாக இருந்தேன். அத்துடன் பாங்கு ஒன்றில் வேலை பார்த்தேன். என் குடும்பத்தில் நான் தவிர வேறு ஒருவருமில்லை. என் தந்தை வைத்த நிலமும் வீடும் எனக்கிருந்தது. இதனால் தற்கால மனித சமுதாயம் விரும்பும் பொருளும் புகழும் எனக்குக் கிட்டியது. என் வாழ்வில் எனக்கொரு இலட்சியம் வேண்டும். வாழ்வில் எது உயர்ந்த நிலை? எது உயர்ந்த பண்பாடு? எது சிறப்பான வாழ்க்கை? என்று என்னை நானே கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில், நான் ஒரு சாமியாரை - உபன்யாசம் பவனைக் கண்டேன். அவனது பெயர் சிவஞானமென்பது. செய்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/243
Appearance