உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24Z ய அவனுடைய உபன்யாசங்கள் எனக்கு மிகவும் பிடித் திருந்தன. அவன் கூறுவதெல்லாம் எனக்கு உண்மையெனப் பட்டன. நானும் அவனும் நெருங்கிய நண்பர்களானோம். அவனிடம் நான் நாள் தவறாமல் மதத்தைப்பற்றிய பல வற்றைக் கற்று வந்தேன். அதற்காக வடமொழி பயின்றேன். புராண இதிகாசங்களையும் வேத வேதாந்தங்களையும் கற்றுத் தெரிந்தேன். வடமொழி, தமிழ் தவிர, பிற மொழி களில் போற்றப்பட்ட மதக்கோட்பாடுகளையும் கண்டறிந் தேன். இவையெல்லாம் படித்ததும் மதத்தினிடம் எனக் கிருந்த பற்று வெறியாகவே மாறிவிட்டது. என்னுடனிருந்த சாமியாருக்குக் கண்ணை மூடிக்கொண்டு செலவழித்தேன். ஒருநாள் அந்தச் சாமியார் என்னிடம், காசியில் ஒரு பெரிய மடம் இருப்பதாகவும், அங்கு ஒரு மதகுரு பெரிய மகான் - இருப்பதாகவும், இருவரும் அங்குச் சென்று அவருடைய போதனைகளைக் கேட்டுக்கொண்டு அங்கேயே இருந்து காலம் கழித்து விடலாம், அது புண்ணிய பூமி என்றும் கூறினான். அதன்பேரில், என்னிடம் ரொக்க மாக இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். பாதி வழியில் அந்தச் சாமியார் என்னைக் கைவிட்டு விட்டான். என் பணத்தில் ஒரு பகுதி அவனிடமிருந்தது. நான் அப்பொழுது அவனுடைய கபடத்தை அறியவில்லை. அவன் ஏதாவதொரு ஸ்தலத்தைப் பார்த்துவிட்டுப் பக்தி மேலீட் டால் சென்றிருப்பான்; எப்படியும் காசி வந்து சேருவான் என்று நினைத்தேன். நான் மட்டும் காசி சென்று அங்கிருந்த மடத்தை,அந்த மகானைக் கண்டேன். அப்பொழுது அவர் பிரான்சிலிருந்து இந்துமத போதனைபெற வந்திருந்த இளம்மாது ஒருவருக்கு மதபோதனை செய்வதில் முனைந்திருந்தார். அதைக் கண்டு அவரிடம் எனக்கிருந்த மதிப்பு இன்னும் அதிகமாயிற்று. "விஞ்ஞான ரீதியாக மதத்தை ஆராயப் புகுந்தால் ஒன்றும் மிஞ்சாது. அது தவறு. விஞ்ஞான உலகில் தவிர அது வேறு உலகில் பயன்படாது. மதத்தைப் பற்றியும் வேதோப