243 நிஷத்துக்களைப் பற்றியும் அறியவேண்டுமானால், இகத்தின் இன்பம் என்னும் மாயையில் சிக்காது. பரம் பற்றிய ஆராய்ச்சியில், அந்தப் பேரின்பத்தில் இறங்கி, முன்னோர் கள் வழிப்படி நடக்கவேண்டும். எளிமையான வாழ்வு உண்மையான உள்ளம் இவற்றுடன் இருப்பதுதான் சிறந்த வாழ்வு" என்று அவர் கூறினார். ய மத மாயையில் மூழ்கிக்கிடந்த நான், "எளிமை, இரக்கம் உண்மையைக் காணும் பண்பு" இதைப் போதித்த அந்த குரு அணிந்திருந்த பட்டுப் பீதாம்பரத்தையும், வைரம் பதித்த உத்திராட்சத்தையும், பாலருந்திய தங்கக் கிண்ணத்தையும் கவனிக்கவில்லை. பிறரை எத்தி வாழ்ந்துவரும் அவருடைய தேகத்தின் பளபளப்பை, நான் அவருக்குப் பக்திமிகுதியால் பரமனின் அருளால் கிடைத்த ஜோதி என்று எண்ணி ஏமாந் தேன். எனக்கிருந்த வீடு, நிலம், இவற்றை அந்த மடத்தின் பெயருக்கு எழுதிவைத்தேன். இரக்கத்தின் மொத்த வியாபாரி நான்தான். என் மூலம்தான் இரக்கம் செயல்பட வேண்டும்' என்று போதனை செய்துகொண்டு, ஊரில் என் போன்றவர்களின் பணத்தை தம் மடத்தின் பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்டிருந்தார் அவர். வெளிநாடுகளில் தேய்ந்து உருக்குலைந்து வரும் இந்து மதத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட என்னை அனுப்பி வைத்தார். பல இடங்களிலும் இந்துமதப் பிரசாரம் செய்து விட்டு, ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு மலேயாவிருந்து நான் தாய்நாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். அன்று நான் வந்த கப்பலில் ஒரு பெண்ணைச் சந்தித்தேன். அந்த நாள் என் வாழ்க்கைப் பாதையில் ஒரு முக்கியமான திருப்பமாகும்.ஆம்! அந்தப் பெண்ணின் பெயர்தான் சாரு! மிகவும் எளிமையான தோற்றத்தோடு காணப்பட்ட அவள் கவர்ச்சிகரமாக இருந்தாள். துன்பத்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/245
Appearance